Shreyas Iyer : 19 வயதிலிருந்தே இவருடன் விளையாடுவதால் வெற்றி எளிமையானது – ஷ்ரேயாஸ் ஐயர் பெருமிதம்

ஐ.பி.எல் தொடரின் 30 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத் நகரில் நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமை

iyar
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 30 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத் நகரில் நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஐயர் 45 ரன்களும், காலின் முன்ரோ 24 பந்துகளில் 40 ரன்களை குவித்தார். இதனால் சன் ரைசர்ஸ் அணிக்கு 156 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களை மட்டும் அடித்து 39 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஒருகட்டத்தில் 72 ரங்களுக்கு 1 விக்கெட்டை மட்டும் இழந்த சன் ரைசர்ஸ் அணி 10 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாக தோல்வியை அடைந்தது. டெல்லி அணி சார்பில் 22 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தது ரபாடா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Munro

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது : நாங்கள் அடித்த ரன்கள் வெற்றிக்கு தேவையான இலக்கிற்கு சற்று குறைவானது தான். பண்ட் மற்றும் நான் இருவரும் களத்தில் இருக்கும்போது எண்களில் ஒருவர் அதிரடியாக ஆட நினைத்தோம். ஆனால், இறுதியில் எங்களால் இவ்வளவு ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

இந்த இலக்கில் சன் ரைசர்ஸ் அணியை கட்டுப்படுத்த முடியும் என்று நினைத்தேன். அதற்கேற்றபடி நம்பமுடியாத ஒரு வெற்றியினை எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் பெற்று தந்தனர். ஏற்கனவே 19 வயதுக்கு உட்பட்டவர் அணியில் ரபாடா உடன் விளையாடியதால் அவருடன் எனக்கு இருக்கும் நட்பு போட்டியை வெல்ல பெரிதளவு உதவுகிறது என்று ஐயர் கூறினார்.

Advertisement