சன் ரைசர்ஸ் அணியை எளிதில் வீழ்த்த இருவரே காரணமாக அமைந்தனர் – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி

iyer

ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை குவித்தது.

srhvsdc

அதிகபட்சமாக தொடக்க வீரர் தவான் 50 பந்துகளில் 2 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் குவித்தார். மேலும் மற்றொரு துவக்க வீரர் என ஸ்டாய்னிஸ் 38 ரன்களையும் இறுதி நேரத்தில் 22 பந்துகளை சந்தித்த ஹெட்மையர் அதிரடியாக 42 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 172 ரன்களை குவித்தது. இதன் காரணமாக 17 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

சன்ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக வில்லியம்சன் 67 ரன்களையும், அப்துல் சமாத் 33 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் டெல்லி அணி சார்பாக ரபாடா 4 ஓவர்கள் வீசி 29 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டாய்னிஸ் 3 ஓவர்கள் வீசி 26 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக ஸ்டாய்னிஸ் அறிவிக்கப்பட்டார்.

rabada

இந்நிலையில் வெற்றி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் : இந்த தொடரின் அனுபவம் மிகச் சிறப்பாக இருந்தது. இந்த தொடர் முழுவதுமே நாங்கள் வெற்றி தோல்வி என ஏற்ற இறக்கத்துடன் சென்று கொண்டிருக்கிறோம். இன்றைய நாள் முடிவில் நாங்கள் ஒரு அணியாக விளையாடி வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி. அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் சரியான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். எனக்கு பல சிந்தனைகள் இருந்தாலும் வீரர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து அணிக்காக விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

அதுமட்டுமின்றி பயிற்சியாளர்கள் மற்றும் சப்போர்ட் ஸ்டாப் என அனைவரும் அணியுடன் இருக்கிறார்கள். நாங்கள் தொடர்ச்சியாக அணியில் இருந்து வீரர்களை நீக்குவதும், சேர்ப்பதுமாக இருந்து வருகிறோம். இருப்பினும் அது அணியின் வெற்றிக்கு உதவுகிறது இதை அடுத்த போட்டியிலும் தொடர்வோம் என நினைக்கிறேன். மும்பை போன்ற பெரிய அணிக்கு எதிராக வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். நாங்கள் எந்தவித அழுத்தமும் இன்றி இயல்பாக விளையாட நினைக்கிறோம்.

dhawan

ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைய வேண்டும் என நினைத்தோம். அதன்படி துவக்கத்தில் ஸ்டாய்னிஸ் மற்றும் தவான் சிறப்பாக துவங்கினார்கள். அதிகப்படியான பவுண்டரி ரன்களையும் அவர்கள் விளையாடினார்கள். அது எங்களுக்கு சிறப்பான துவக்கத்தை அளித்து வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது என்று ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.