நாங்க ஜெயிச்சதுக்கு காரணமே பேட் கம்மின்ஸ் எடுத்த முடிவு தான்.. அவருக்கு நன்றி – ஷ்ரேயாஸ் ஐயர் மகிழ்ச்சி

Shreyas
- Advertisement -

இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியுடன் நிறைவுக்கு வந்தது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் முதலில் தங்களது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி கொல்கத்தா அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 18.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக ரசல் 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் மற்றும் ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 114 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெங்கடேஷ் ஐயர் 52 ரன்கள் குவித்து கொல்கத்தா அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் : உண்மையிலேயே இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களது அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு போட்டியிலும் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கினர்.

- Advertisement -

இந்த தொடரில் வெற்றி பெறுவதற்கு நீண்ட தூரம் காத்திருக்க வேண்டி இருந்தது. இந்த தொடர் முழுவதுமே நாங்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக நினைக்கிறேன். அதன் பலனாக இன்று கோப்பையை கையில் ஏந்தியுள்ளேன். சன்ரைசர்ஸ் அணியும் இந்த தொடர் முழுவதுமே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்கள்.

இதையும் படிங்க : என்ன பிரயோஜனம்.. இதை வெச்சு கோப்பை ஜெயிக்க முடியாதே.. ஆர்சிபி அணியை புதிதாக விமர்சித்த ராயுடு

இன்றைய போட்டியில் டாஸ் வென்றதும் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. நாங்கள் முதலில் பந்து வீசியதால் மிகச் சிறப்பாக அவர்களை தடுத்து நிறுத்தி விட்டோம் என்பதனால் இலக்கை எளிதாக எட்டிப்பிடிக்க முடிந்தது என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement