கடந்த 2 மாதமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வந்த ஐபிஎல் தொடரின் 2024 சீசன் கோலாகலமாக நிறைவு பெற்றுள்ளது. அதில் ஹைதராபாத் அணியை சென்னையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தோற்கடித்த கொல்கத்தா சாம்பியன் பட்டத்தை வென்றது. அதனால் 2012, 2014க்குப்பின் 3வது கோப்பையை வென்ற கொல்கத்தா அணி சென்னை மற்றும் மும்பையை தொடர்ந்து 2வது வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்தது.
மறுபுறம் 113 ரன்களுக்கு அவுட்டாகி ஆரம்பத்திலேயே வெற்றியை தாரை வார்த்த ஹைதராபாத் 2016க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. இறுதியில் வெற்றி பெற்ற அணிக்கும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதில் 741 ரன்கள் விளாசி அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்த விராட் கோலிக்கு ஆரஞ்சு தொப்பியுடன் 10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
மீண்டும் ராயுடு:
மேலும் 2016ஆம் ஆண்டு 973 ரன்கள் குவித்த விராட் கோலி ஏற்கனவே ஆரஞ்சு தொப்பியை வென்றிருந்தார். அதனால் இதையும் சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் 2 ஆரஞ்சு தொப்பிகளை வென்ற முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையின் விராட் கோலி படைத்தார். இருப்பினும் அவருடைய பெங்களூரு அணி எலிமினேட்டர் போட்டியுடன் வெளியேறியதால் இம்முறையும் விராட் கோலி ஐபிஎல் கோப்பையை முத்தமிட முடியாமலேயே ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
இந்நிலையில் ஆரஞ்சு தொப்பியை வென்றால் மட்டும் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாது என்று முன்னாள் வீரர் அம்பாத்தி ராயுடு ஆர்சிபி அணியை மீண்டும் மறைமுகமாக விமர்சித்துள்ளார். அதாவது இந்த வருடம் கடைசியில் போட்டியில் சென்னையை தோற்கடித்த பெங்களூரு அணி ரசிகர்களும் வீரர்களும் அதைக் கோப்பையை வென்றதற்கு நிகராக வெறித்தனமாக கொண்டாடினர். ஆனால் அடுத்த போட்டியிலேயே ராஜஸ்தானிடம் தோற்ற பெங்களூரு 17வது கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறியது.
அப்போது சென்னையை தோற்கடித்து வெறித்தனமாக கொண்டாடுவதால் மட்டும் கோப்பையை வெல்ல முடியாது என்று ஆர்சிபி அணியை நேரடியாக விமர்சித்த ராயுடு சொந்த சாதனைக்காக விளையாடாமல் அணிக்காக விளையாட்ஸ் வேண்டுமென அறிவுரை வழங்கினார். அது ஆர்சிபி ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ராயுடு புதிதாக பேசியது பின்வருமாறு. “கொல்கத்தா அணிக்கு வாழ்த்துக்கள்”
இதையும் படிங்க: 488 ரன்ஸ் 17 விக்கெட்ஸ்.. 17 வருட ஐபிஎல் வரலாற்றில் யாருமே செய்யாத பிரம்மாண்ட சாதனையை நிகழ்த்திய சுனில் நரேன்
“நரேன், ரசல், ஸ்டார்க் போன்ற நட்சத்திர வீரர்கள் உயர்ந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி தங்களுடைய அணியின் வெற்றிகளில் பங்காற்றினர். அப்படித்தான் நீங்கள் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியும். இதை நாம் பல வருடங்களாக பார்த்து வருகிறோம். ஆரஞ்சு தொப்பி உங்களுக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுக்காது. ஆனால் நிறைய வீரர்கள் 300 ரன்கள் அடிப்பது போன்ற கூட்டணியான செயல்பா



