வாழ்வா ? சாவா ? போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்த இவரே முக்கிய காரணம் – ஷ்ரேயாஸ் ஐயர் புகழாரம்

Iyer
- Advertisement -

ஐபிஎல் தொடரில் 55 ஆவது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், விராட்கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் ஐயர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.

DCvsRCB

- Advertisement -

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 152 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் படிக்கல் 50 ரன்களும், டிவில்லியர்ஸ் 35 ரன்களும் குவித்தனர். டெல்லி அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய நோர்க்கியா 3 விக்கெட்டுகளையும், ரபாடா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதன்பின்னர் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரஹானே 60 ரன்களும், ஷிகர் தவான் 54 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக நோர்க்கியா தேர்வு செய்யப்பட்டார்.

dhawan

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் : இந்த போட்டியில் வெற்றி பெற்றது சிறப்பான ஒன்று. எங்களுக்கு தெரியும் இந்தப் போட்டி எங்களுக்கு வாழ்வா சாவா போட்டி போன்ற ஒரு தருணம். மேலும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் இரண்டாவது இடத்திற்கு செல்ல முடியும். எனவே நாங்கள் இந்த போட்டிக்கு முன்பு ஒரு உத்வேகத்தோடு களம் இறங்கினோம்.

- Advertisement -

இந்த தொடரின் முதல் பாதியில் இருந்த நிலையைவிட விட இரண்டாவது பாதியில் முற்றிலும் மாற்றம் இருந்தது. இருப்பினும் இந்த தொடர் முழுவதும் நாங்கள் விளையாடிய விதம் எங்களுக்கு திருப்தி அளிக்கிறது. எங்களுடைய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி வருகின்றனர்.

nortje

மேலும் நோர்க்கியா இந்த தொடர் முழுவதும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். மற்ற அனைத்து பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். சரியான இடத்தில் சரியான திறனுடன் பந்துவீச்சாளர்கள் செயல்பட்டு வருவதால் வெற்றிகள் எங்கள் வழி வருகிறது என்று ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement