- Advertisement -
ஐ.பி.எல்

அவங்க 2 பேர் விளையாடுறதையும் பாத்து அசந்துட்டேன்.. லக்னோ அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு – ஷ்ரேயாஸ் பேட்டி

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 29-வது லீக் போட்டியானது நேற்று சண்டிகர் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

லக்னோ அணிக்கெதிரான வெற்றிக்கு பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் பேச்சு :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக பிரியான்ஷ் ஆர்யா 93 ரன்களையும், கூப்பர் கானோலி 87 ரன்களையும் குவித்தனர். பின்னர் 255 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது : 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்ததால் பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணியானது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் வலுவான நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது : உண்மையிலேயே இந்த போட்டியில் பிரியான்ஷ் ஆர்யா மற்றும் கூப்பர் கானோலி ஆகிய இருவரும் விளையாடிய விதத்தை பார்த்து அசந்து விட்டேன். அவர்கள் விளையாடிய ஒரு சில ஷாட்டுகளை வாயை திறந்து கொண்டு பார்த்துக் கொண்டேன்.

அந்த அளவிற்கு அவர்கள் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தனர். உண்மையிலேயே வேகப்பந்து வீச்சாளர்களையும் சரி, சுழற்பந்து வீச்சாளர்களையும் சரி அவர்கள் இருவரும் அடித்து விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது. அவர்கள் அமைத்த பார்ட்னர்ஷிப் எங்களை பெரிய ஸ்கோரை நோக்கி எளிதாக நகர உதவியது. மிடில் ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை அவர்கள் வெளிப்படுத்தியதால் மிகச் சிறப்பான ரன் குவிப்பை நோக்கி நகர்ந்தோம்.

- Advertisement -

இதையும் படிங்க : லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர் – தரமான சம்பவம்

எங்கள் அணியில் சிக்ஸ் அடிக்கும் வீரர்கள் இருக்கிறார்கள். தற்போது மிடில் ஓவர்களிலும் அதிகளவு சிக்சர்கள் எங்களது அணியின் வீரர்களிடம் இருந்து வருவது மகிழ்ச்சி. இந்த லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அனைவருமே மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். எங்கள் அணியின் சூழலும் சிறப்பாக இருப்பதினால் வெற்றிகள் தொடர்ந்து கிடைக்கிறது என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -