- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரஜத் பட்டிதாருக்கு இந்த வாய்ப்பை வழங்கினால் தான் அது சரியா இருக்கும் – ஆகாஷ் சோப்ரா கருத்து

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான எஞ்சியுள்ள 3 போட்டிகள் அடுத்தடுத்து நடைபெற இருக்கின்றன.

ரஜத் பட்டிதாருக்கு வாய்ப்பை வழங்க வேண்டும் : ஆகாஷ் சோப்ரா

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடதுகை ஆட்டக்காரர்கள் நிறைந்து இருப்பதனால் பேட்டிங் வரிசையில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது விருப்பங்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தற்போதைய டி20 அணியில் ரஜத் பட்டிதாரை கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணியில் தற்போது டாப் 3 வீரர்களும் இடது கை ஆட்டக்காரராக இருக்கிறார்கள். அவர்கள் மூவரில் ஒருவரை நீக்க வேண்டுமெனில் இஷான் கிஷனை நீக்கி ரஜத் பட்டிதாரை கொண்டு வரலாம்.

ஏனெனில் ஏற்கனவே உலகக்கோப்பை நாயகன் சஞ்சு சாம்சன் சில போட்டிகள் சொதப்பியதன் காரணமாகவே நீக்கியுள்ளனர். அதனால் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனான இஷான் கிஷனும் ஓரிரு போட்டிகள் சரியாக விளையாடவில்லை என்றால் அவரை நீக்குவதில் என்ன தவறு. டி20 போட்டிகளை பொருத்தவரை டாப் ஆர்டரில் வலது கை ஆட்டக்காரர் இருப்பது அவசியம்.

- Advertisement -

இதையும் படிங்க : இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாட இருக்கும் பும்ரா எடுக்கும் – ஸ்பெஷல் பயிற்சி

அந்த வகையில் ஐ.பி.எல் போட்டிகளில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரஜத் பட்டிதாரை இந்திய டி20 அணியில் காண விரும்புகிறேன். ஏற்கனவே இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்த அவர் ஒரு சில போட்டிகளில் நீக்கப்பட்டார். தற்போது டி20 போட்டிகளுக்கு அவருக்கு வாய்ப்பை வழங்கினால் அது சரியாக இருக்கும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -