- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நாளைய போட்டியில் மஹேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – அக்சர் படேல்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது ஜூலை 7ஆம் தேதியான நாளை நடைபெறவுள்ளது. நாட்டிங்காம் நகரில் நடைபெறயிருக்கும் இந்த போட்டியில் விளையாட காத்திருக்கும் இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொடரில் ஏற்கனவே இந்திய அணி இரண்டாவது போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது.

எம்.எஸ் தோனியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அக்சர் படேல் :

இதன் காரணமாக தற்போது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் பின்தங்கியுள்ள இந்திய அணி நாளைய போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரை சமன் செய்யும் முனைப்புடன் தயாராகி வருகிறது. இவ்வேளையில் நாளைய போட்டியில் இந்திய அணியின் சார்பாக விளையாட இருக்கும் நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அக்சர் பட்டேல் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிக்க காத்திருக்கிறார்.

- Advertisement -

அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் அக்சர் பட்டேல் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக கடந்த 2015-ஆம் ஆண்டு அறிமுகமான அக்சர் பட்டேல் இதுவரை 98 சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.

ஏற்கனவே மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக 98 டி20 போட்டிகளில் விளையாடி இந்திய அணி சார்பில் அதிக டி20 போட்டிகளில் விளையாடிய வீரராக ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். இவ்வேளையில் நாளைய போட்டியில் அக்சர் படேல் விளையாடும் பட்சத்தில் 99 டி20 போட்டிகளில் விளையாடி தோனியை பின்னுக்கு தள்ளுவார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணி செய்ஞ்ச தப்பையே திரும்பி திரும்பி செய்றாங்க.. துவக்க வீரர்கள் குறித்து – முகமது கைப் விமர்சனம்

இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக டி20 போட்டிகளில் 159 ஆட்டங்களில் விளையாடி ரோகித் சர்மா முதலிடத்திலும், 138 ஆட்டங்களில் விளையாடி ஹார்டிக் பாண்டியா இரண்டாவது இடத்திலும், 125 ஆட்டங்களில் விளையாடி விராட் கோலி மூன்றாவது இடத்திலும், 113 போட்டியில் விளையாடி சூரியகுமார் யாதவ் நான்காவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -