மும்பை எங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்கனு நினைக்குறேன்.. லக்னோவை வீழ்த்திய பிறகு – ஷ்ரேயாஸ் ஐயர் பேச்சு

Shreyas Iyer
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 68-வது லீக் போட்டியானது நேற்று லக்னோ நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதல் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணி :

லக்னோ அணியை வீழ்த்திய பிறகு பேசிய : ஷ்ரேயாஸ் ஐயர்

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது. பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது 18 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் குவித்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றதோடு தங்களது பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பையும் உயிர்ப்புடன் வைத்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் பஞ்சாப் அணி சார்பாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்த ஷ்ரேயாஸ் ஐயர் தாங்கள் பெற்ற வெற்றி குறித்து போட்டிக்கு பின்னர் பேசியதாவது : இந்த போட்டி எனக்கு மிகச் சிறப்பாக அமைந்தது. அதிலும் குறிப்பாக என்னுடைய முதல் சதம் இந்த போட்டியின் முக்கியமான நேரத்தில் வந்துள்ளதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

ஆறு தோல்விகளுக்கு பிறகு கிடைத்த எந்த வெற்றி எங்களுக்கு நல்ல ஒரு முமென்ட்டத்தை கொடுத்துள்ளது. அடுத்த போட்டியில் மும்பை அணி எங்களுக்கு சப்போர்ட் செய்து வெற்றி பெறுவார்கள் என்று நினைக்கிறேன். எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசினர். அதிலும் குறிப்பாக அஸ்மதுல்லா அற்புதமாக பந்து வீசியிருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : அற்புதமான சதத்துடன் பிளே ஆப் வாய்ப்பை உயிர்ப்புடன் மாற்றிய ஷ்ரேயாஸ் ஐயர் – விவரம் இதோ

யுஸ்வேந்திர சாஹல் சரியான நேரத்தில் ரன்களை கட்டுப்படுத்தி முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார். அதேபோன்று பேட்ஸ்மேன்களும் சரியான ரன் ரேட்டுடன் விளையாட எங்களால் எளிதாக வெற்றியை நோக்கி நகர முடிந்தது. ஒட்டுமொத்தமாக இந்த போட்டியில் அணி வீரர்களின் மொத்த பங்களிப்பு காரணமாகவே வெற்றி பெற்றுள்ளோம் என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement