அற்புதமான சதத்துடன் பிளே ஆப் வாய்ப்பை உயிர்ப்புடன் மாற்றிய ஷ்ரேயாஸ் ஐயர் – விவரம் இதோ

PBKS vs LSG
- Advertisement -

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக லக்னோ நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 68-வது லீக் போட்டியில் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது தங்களது ஏழாவது வெற்றி பதிவு செய்தது. இதன் மூலம் தங்களது பிளே ஆப் வாய்ப்பை உயிர்ப்புடன் மாற்றியுள்ளது.

பஞ்சாப் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்ற ஷ்ரேயாஸ் ஐயர் :

அந்த வகையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது. லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக ஜாஸ் இங்கிலீஷ் 72 ரன்களையும், ஆயுஷ் பதோனி 43 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் குவித்து 7 விக்கெட் தியாகத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்ச ஷ்ரேயாஸ் ஐயர் 101 ரகளையும், பிரப்சிம்ரன் சிங் 69 ரன்களையும் குவித்தனர்.

இந்த போட்டியில் பஞ்சாப் அணி 197 ரன்கள் என்கிற சவாலான இலக்கினை துரத்திய வேளையில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் இதுவரை ஐ.பி.எல் போட்டியில் சதம் அடிக்காமல் இருந்த வேளையில் இன்றைய ஆட்டத்தில் 51 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர் என ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் குவித்து அவரது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஒருவழியா கடைசி போட்டியில் வாய்ப்பினை பெற்ற அர்ஜுன் டெண்டுல்கர்.. எப்படி தெரியுமா? – விவரம் இதோ

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியானது தற்போது இந்த ஐ.பி.எல் தொடரில் 15 புள்ளிகளை எடுத்துள்ளது. அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமெனில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா ஆணிய அணிகள் தோல்வியை சந்திக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement