ஒருவழியா கடைசி போட்டியில் வாய்ப்பினை பெற்ற அர்ஜுன் டெண்டுல்கர்.. எப்படி தெரியுமா? – விவரம் இதோ

Arjun Tendulkar
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 68-வது லீக் போட்டியானது மே 23-ஆம் தேதியான இன்று லக்னோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளும் மோதி வருகின்றன.

ஒருவழியாக வாய்ப்பை பெற்ற அர்ஜுன் டெண்டுல்கர் :

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து தற்போது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ஏற்கனவே இந்த தொடரின் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்த லக்னோ அணி கடைசி போட்டியில் சொந்த மண்ணில் வெற்றி பெற்று கௌரவமாக விடைபெறும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது.

- Advertisement -

அதே வேளையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற ஒரு வாய்ப்பு இருப்பதால் வாழ்வா? சாவா? என்கிற சூழ்நிலையுடன் பஞ்சாப் அணி இந்த போட்டியில் விளையாடி வருகிறது. இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது லக்னோ அணி சார்பாக சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு இறுதியாக ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாதெனில் : ஏற்கனவே 13 போட்டிகளாக ஒரு வாய்ப்புக்காக காத்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் பயிற்சியின்போது மிகச் சிறப்பாக செயல்பட்டதால் தற்போது லக்னோ அணி இந்த தொடரில் இருந்து வெளியேறிவிட்ட வேளையில் கடைசி போட்டியில் இவருக்கும் மற்றொரு துவக்க வீரரான அர்ஷின் குல்கர்னிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : 200 ரன்கள் அடிப்பதில் தாங்கள் தான் கிங் என்பதை நிரூபித்து சன் ரைசர்ஸ் அணி – நிகழ்த்திய சாதனை

இந்த 2026 ஐ.பி.எல் தொடருக்கான பயிற்சிகளில் சிறப்பாக செயல்பட்ட அர்ஜுன் டெண்டுல்கர் இன்றைய போட்டியில் எவ்வாறு செயல்படப்போகிறார்? என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement