சுனில் நரேனை விடுங்க.. அந்த பையன் ஆடுறத பாக்க ரொம்ப சூப்பரா இருக்கு – ஷ்ரேயாஸ் ஐயர் புகழாரம்

Shreyas-Iyer
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது லீக் போட்டியானது நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியானது முதலில் பேட்டி செய்வதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி டெல்லி அணியின் பந்துவீச்சாளர்களை சிதறடித்து 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களை குவித்து அட்டகாசம் செய்திருந்தது. கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக சுனில் நரேன் 85 ரன்களையும் ரகுவன்ஷி 54 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 273 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது கொல்கத்தா அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 17.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக கொல்கத்தா அணியானது 106 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டி ஆரம்பிக்கையில் நாங்கள் 210 முதல் 220 ரன்கள் வரை தான் எடுப்போம் என்று நினைத்தேன். ஆனால் 270 ரன்கள் வரை ஈசியாக கிடைத்துவிட்டது.

- Advertisement -

நான் போட்டிக்கு முன்பாக கூறியது ஒரே விடயம் தான் : துவக்க வீரராக சுனில் நரேன் களமிறங்குவது எங்களுக்கு ஒரு நல்ல துவக்கத்தை வழங்குவதற்காக மட்டும்தான். ஒருவேளை அவர் சரியாக துவங்கவில்லை என்றாலும் பிரச்சனை கிடையாது. அதேபோன்று ரகுவன்ஷி தனது முதல் இன்னிங்ஸ்சிலேயே அதுவும் முதல் பந்தில் இருந்தே பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க : பாண்டியாவின் கேப்டன் பதவியை பறித்து ரோஹித்திடம் குடுத்துடுவாங்க.. ஏன் தெரியுமா? – மனோஜ் திவாரி ஓபன்டாக்

அவரது விளையாடும் ஷார்ட்டுகளை பார்க்கும் போது மிகச் சிறப்பாக உள்ளது. அதேபோன்று இந்த போட்டியில் பந்துவீச்சாளர்கள் அனைவருமே சரியான நேரத்தில் விக்கெட்டுகளை எடுத்து மிகச் சிறப்பாக தங்களது வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டனர் என ஷ்ரேயாஸ் ஐயர் வெற்றி குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement