பாண்டியாவின் கேப்டன் பதவியை பறித்து ரோஹித்திடம் குடுத்துடுவாங்க.. ஏன் தெரியுமா? – மனோஜ் திவாரி ஓபன்டாக்

Manoj-Tiwary
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான புதிய கேப்டனாக ஹார்டிக் பாண்டியாவை அறிவித்ததிலிருந்தே மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அதோடு மும்பை அணி விளையாடும் எந்த போட்டிகளுக்கும் மைதானத்தில் பெரியளவு ஆதரவு கிடைப்பதில்லை.

அதோடு பாண்டியாவை எதிர்த்து கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர். இதன் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி குறித்த பேச்சுக்களே அதிகளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது .அதே போன்று நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி தாங்கள் விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

- Advertisement -

நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தும் அணிக்குள் ஒற்றுமை இல்லாமல் இரண்டாக பிரிந்து இருப்பதினால் இந்த தோல்விகள் கிடைத்து வருவதாகவும் பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் தோல்விகளாலும், ரசிகர்களின் எதிர்ப்பாலும் கேப்டன் ஹார்டிக் பாண்டியா அழுத்தத்தை சந்தித்துள்ளார் என இந்திய அணியின் முன்னாள் வீரரான மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது : தற்போது ஹார்டிக் பாண்டியா மிகப்பெரிய அழுத்தத்தில் இருக்கிறார் என்பது சில விடயங்களின் மூலம் தெரிகிறது. மேலும் ஒவ்வொரு மைதானத்திலும் ரசிகர்களின் எதிர்ப்பை உணரும் அவர் அணியை வழி நடத்துவதிலும் ஆட்டம் காணுகிறார். நான் பெரிய விஷயம் ஒன்றை சொல்லப் போகிறேன்.

- Advertisement -

இந்த ஆறு நாள் இடைவெளியில் பாண்டியாவிடம் இருந்து கேப்டன்சியை பறித்து ரோஹித் சர்மாவிடம் கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்த மாற்றம் நிச்சயம் நடக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஐபிஎல் உரிமையாளர்கள் குறித்து எனக்கு தெரிந்தவரை அவர்கள் இதுபோன்ற முடிவுகளை எடுக்க தயங்க மாட்டார்கள். எனவே நிச்சயம் ரோஹித் சர்மா மீண்டும் கேப்டன் பதவியை பெற அதிக வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : பாதாளத்தில் தவிக்கும் மும்பைக்கு நல்ல செய்தி.. சூரியகுமார் எந்த தேதியில் விளையாடுவார்? வெளியான தகவல்

ஐந்து கோப்பையை பெற்றுக் கொடுத்த ஒரு கேப்டனை மாற்றி விட்டு தற்போது புதிய கேப்டன் தலைமையில் ஒரு வெற்றி கூட கிடைக்கவில்லை. அவரது கேப்டன்சியும் சரியில்லை நிறைய தவறுகள் நடக்கின்றன என மனோஜ் திவாரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement