ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று தரம்சாலா நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 61-ஆவது லீக் போட்டியில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
ஆர்.சி.பி அணிக்கெதிரான தோல்வி குறித்து : ஷ்ரேயாஸ் ஐயர் பேச்சு
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவித்தது. பின்னர் 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை மட்டுமே குவித்தது.
இதன் காரணமாக ஆர்.சி.பி அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது : இந்த போட்டியில் பெங்களூரு அணியின் வீரர்கள் மிகச் சிறப்பான துவக்கத்தை பெற்றனர்.
எங்களது பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கம் செய்து விளையாடிய அவர்கள் 222 ரன்கள் வரை குவித்தனர். இந்த போட்டியில் நாங்கள் நினைத்த அளவிற்கு எங்களால் சிறப்பாக பந்துவீச முடியவில்லை. அதேபோன்று பேட்டிங்கிலும் பவர்பிளே ஓவர்களிலேயே எல்லாம் முடிந்து விட்டது. அதாவது இவ்வளவு பெரிய ரன்களை சேசிங் செய்யும் போது பவர்பிளே ஓவர்களில் நல்ல துவக்கம் கிடைக்க வேண்டியது அவசியம்.
இதையும் படிங்க : அங்கேயே எல்லாம் முடிஞ்சது.. ஆர்.சி.பி அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – ஷ்ரேயாஸ் ஐயர் வருத்தம்
ஆனால் நாங்கள் 3 விக்கெட்டுகளை அங்கேயே இழந்து விட்டோம். எனவே அங்கேயே எல்லாம் முடிந்து விட்டது. பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் மற்றும் நான் என மூவருமே அங்கேயே ஆட்டமிழந்து விட்டோம். அதன்பிறகு எங்களது அணி சிறப்பாக செயல்பட்டாலும் பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி எங்களை வீழ்த்தியுள்ளனர் என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.



