அதுதான் டர்னிங் பாயின்ட்.. ஒரே பவுலர் எங்களை வீழ்த்தி விட்டார்.. ஆர்.சி.பி டீமிடம் தோற்ற பிறகு – ஷ்ரேயாஸ் வருத்தம்

Shreyas Iyer
- Advertisement -

அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி தங்களது முதல் கோப்பையை தவறவிட்டது. அதேவேளையில் 18 ஆண்டுகள் காத்திருந்த ஆர்.சி.பி அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியிருந்தது.

ஆர்.சி.பி அணியிடம் தோக்க இதுவே காரணம் : ஷ்ரேயாஸ் ஐயர்

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பின்னர் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை குவித்தது. பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்களையும், ரஜத் பட்டிதார் 26 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் குவித்ததால் பஞ்சாப் பணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வியை தழுவியது. இந்த போட்டியின் போது பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக ஷஷாங்க் சிங் 61 ரன்களையும், ஜாஸ் இங்கிலீஷ் 39 ரன்களையும் அடித்தனர்.

இந்த போட்டியின் போது மிக நெருக்கமாக வந்து பஞ்சாப் அணி தோல்வியை தழுவியது அந்த அணிக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை நிச்சயம் அளித்திருக்கும். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் எங்களது வீரர்கள் கடுமையான போராட்டத்தை அளித்தனர். எங்களுடைய நிர்வாகம், சப்போர்ட் ஸ்டாப்கள் என அனைவருமே இந்த தொடருக்காக கடுமையாக உழைத்திருந்தனர். நாங்கள் கடந்த போட்டியில் மும்பை அணியை வீழ்த்திய பிறகு இந்த போட்டியில் 200 ரன்கள் வரை ஆர்.சி.பி அடித்தால் திருப்பி அடிக்க முடியும் என்று நினைத்தோம்.

- Advertisement -

ஆனால் பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அதிலும் குறிப்பாக நிறைய அனுபவம் கொண்ட க்ருனால் பாண்டியா மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி எங்களை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டார். அவரது ஸ்பெல் தான் இந்த போட்டியில் டர்னிங் பாயிண்டாக அமைந்தது. அனுபவம் வாய்ந்த அவர் சிறப்பாக பந்து வீசவே அங்கிருந்து நாங்கள் மிகப்பெரிய சரிவை சந்தித்தோம்.

இதையும் படிங்க : அவங்கள மாதிரி முடியாம உட்காரல.. ரோஹித்தை கேலி செய்தாரா விராட் கோலி? ஹிட்மேன் ரசிகர்கள் கோபம்

இருந்தாலும் இந்த போட்டியில் எங்களது அணியின் வீரர்கள் விளையாடிய விதம் உண்மையிலேயே பெருமை அளிக்கிறது. இந்த தொடர் முழுவதுமே நிறைய இளம் வீரர்கள் முதல்முறையாக விளையாடினாலும் பயமற்ற முறையில் விளையாடியிருந்தார்கள். இந்த வருடம் நாங்கள் கோப்பையை தவறவிட்டாலும் நிச்சயம் அடுத்த ஆண்டு கோப்பையை கைப்பற்றுவோம் என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement