- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இவ்ளோ கொடுமையா இருக்கும்னு நான் நெனைக்கல.. தனது காயம் குறித்து பேசிய – ஷ்ரேயாஸ் ஐயர்

இந்திய அணியின் நட்சத்திர வீரரும், துணை கேப்டனுமான ஷ்ரேயாஸ் ஐயர் கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரின் போது கேட்ச் பிடிக்கையில் டைவ் அடித்து அடிவயிற்றில் காயமடைந்தார். அப்படி காயமடைந்த அவருக்கு முதலுதவி செய்யப்பட்ட வேளையில் அவரால் அந்த போட்டியில் தொடர்ந்து விளையாட முடியாமல் பாதியிலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவருக்கு தீவிரமான காயம் அடிவயிற்றில் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

தனது காயம் குறித்து வெளிப்படையாக பேசிய : ஷ்ரேயாஸ் ஐயர்

பின்னர் ஆஸ்திரேலியவிலேயே அந்த காயத்திற்கான சிகிச்சையை மேற்கொண்ட அவருக்கு அங்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. பின்னர் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி சென்று அங்கு சிகிச்சையும், பயிற்சியையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.

- Advertisement -

பின்னர் படிப்படியாக காயத்திலிருந்து மீண்ட அவர் விஜய் ஹசாரே தொடரிலும் மும்பை அணிக்காக விளையாடியிருந்தார். இப்படி மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிய அவருக்கு மீண்டும் தற்போது நடைபெற்று வரும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் துணை கேப்டனாக பங்கேற்று விளையாடி வருகிறார். இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடரின் போது தனக்கு ஏற்பட்ட காயம் எவ்வாறு இருந்தது? என்பது குறித்த சில வெளிப்படையான தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : உண்மையிலேயே எனக்கு ஏற்பட்ட காயம் என்பது மிகவும் வலி தரக்கூடிய ஒன்றாக இருந்தது.

- Advertisement -

இப்படி ஒரு கஷ்டத்தை நான் பார்த்ததில்லை என்கிற அளவிற்கு அந்த காயம் என்னை துன்புறுத்தியது. நான் கேட்ச் பிடிக்கையில் காயம் அடைந்தபோது இவ்வளவு தீவிரமான காயம் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. ஆனால் என்னுடைய உடம்பில் உள்ள ஒரு முக்கிய பகுதியில் அந்த காயம் தீவிரமாக ஏற்பட்டிருந்தது. இப்போது கூட அந்த வலியை விவரிக்க என்னிடம் வார்த்தை இல்லை.

இதையும் படிங்க : 23 ரன்கள் மட்டுமே அடித்திருந்தாலும் சச்சினின் தனித்துவமான சாதனையை தகர்த்த விராட் கோலி – விவரம் இதோ

நான் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட பிறகு எப்படிப்பட்ட காயம் என்பதை உணர்ந்தேன். அதன் பின்னர் அறுவை சிகிச்சைக்கு பின்னரே இயல்பு நிலைக்கு திரும்பினேன். தற்போது படிப்படியாக நல்ல உடற்தகுதியை எட்டி விளையாடி வருகிறேன். நான் வெளியில் அமர்ந்து போட்டியை பார்க்கக்கூடிய நபர் கிடையாது. எப்போதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒருவர் எனவும் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -