நாங்கள் செய்தது தவறு தான். அதை நியாயப்படுத்த விரும்பவில்லை – உண்மையை ஒத்துக்கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர்

Iyer-1
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. டெல்லி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 53 ரன்கள் குவித்தார்.

dc vs kxip

- Advertisement -

அதனைத் தொடர்ந்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியும் 20 ஓவர்களின் முடிவில் 157 ரன்கள் அடித்து போட்டி “டை” ஆனது. அதிகபட்சமாக துவக்க வீரர் மயங்க் அகர்வால் 89 ரன்களை குவித்தார். சூப்பர் ஓவர் முடிவின் மூலம் டெல்லி அணி இந்த போட்டியில் அபார வெற்றி பெற்றது.

பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் இந்த வெற்றி குறித்து சில சர்ச்சையும் இருந்துவருகின்றன. இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஐயர் பல்வேறு விடயங்களை பகிர்ந்துகொண்டார்.

Rabada

அதில் டெல்லி அணியின் பீல்டிங் குறைபாடுகளைப் பற்றி சற்று வெளிப்படையாகவே ஐயர் பேசியிருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த மைதானத்தில் கேட்ச் பிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில் விளக்கு வெளிச்சத்தின் கீழ் எங்களால் பந்தை சரியாக பிடிக்க முடியவில்லை. கண்களுக்கு நேர் எதிரே விளக்குகள் இருக்கின்றன ஆனாலும் இதை நாங்கள் எந்த விதத்திலும் நியாயப்படுத்த விரும்பவில்லை.

Iyer

ஏனெனில் நாங்கள் போதுமான அளவு பயிற்சியை மேற்கொண்டோம். இருப்பினும் இதுபோன்ற கேட்சை தவற விடுவது சரியான செயல் இல்லை. இனிவரும் போட்டிகளில் பீல்டிங் பகுதியில் எங்களை பலப்படுத்த வேண்டும் என்று பீல்டிங் குறைபாடுகளை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். இந்த ஆட்டத்தில் மயங்க் அகர்வால் மூன்று முறை கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது.

Advertisement