அறுவைசிகிச்சை முடிந்து ஹாஸ்பிட்டலில் கையில் கட்டுடன் இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் – வைரலாகும் புகைப்படம்

Iyer

இந்திய அணியின் முன்னணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் அய்யர் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியின்போது ஃபீல்டிங் செய்கையில் இடது தோள்பட்டையில் காயம் அடைந்தார். காயம் ஏற்பட்டதும் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர் அதன் பின்னர் அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவில் அவருக்கு தோள்பட்டை எலும்பில் நகர்வு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்ட இந்த காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டது. மேலும் அறுவை சிகிச்சை முடிந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஓய்வு வேண்டும் என்பதனால் அவர் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப செப்டம்பர் மாதம் வரை காத்திருக்க வேண்டும்.

இதன் காரணமாக தற்போது நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் அவர் விளையாடவில்லை. ஒட்டுமொத்த தொடரிலும் இருந்து வெளியேறிய அவர் தற்போது தனது தோள்பட்டை காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். மேலும் அவர் டெல்லி அணியில் இருந்து வெளியேறியதன் காரணமாக தற்போது இளம் வீரரான ரிஷப் பண்ட் டெல்லி அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது தனக்கு ஏற்பட்ட தோள்பட்டை காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட செய்ய அவர் இன்று தனது அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துகொண்ட பிறகு தான் கட்டிலில் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயாஷ் ஐயர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

Iyer

அதில் ஐயர் பதிவிட்டதாவது : மீண்டும் நான் களத்திற்கு கூடிய விரைவில் திரும்புவேன். உங்களது அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி என அவரே ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.