IND vs WI : இதை நாங்க ஷ்ரேயாஸ் ஐயர் கிட்ட இருந்து எதிர்பார்க்கவே இல்ல – என்ன அதிசயம் இது?

Shreyas Iyer IND vs WI
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டி20 தொடரானது தற்போது ஃப்ளோரிடோ நகரில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முடிந்த நான்கு போட்டிகள் முடிவில் இந்திய அணி மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் தொடரினை கைப்பற்றிய வேளையில் இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5 ஆவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது.

IND vs WI T20I

- Advertisement -

இந்த போட்டியில் சீனியர் வீரர்கள் நான்கு பேருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஹர்டிக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அதன்படி இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை குவித்தது.

அதனை தொடர்ந்து தற்போது 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது தோல்வியை நோக்கி பயணித்து வருகிறது. கிட்டத்தட்ட இந்த போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது தோற்பது உறுதி என்கிற வேளையில் இந்திய அணியானது இந்த தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் எளிதாக இந்த தொடரை கைப்பற்றப்போகிறது.

Shreyas

இவ்வேளையில் இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயரின் அசத்தலான ஆட்டம் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. ஏனெனில் இதற்கு முன்பாக நடைபெற்ற போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து சொதப்பி வந்ததால் அவர் மீது சில கேலி கிண்டல்களும் இருந்த வேளையில் இன்றைய போட்டியில் அவர் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் தன்மீது இருந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்.

- Advertisement -

இந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய அவர் தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 40 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 64 ரன்கள் விளாசி அசத்தினார். ஒரு பக்கம் இந்திய அணி வீரர்களின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தாலும் மறுபக்கம் தனது அதிரடியை வெளிகாட்டிய ஷ்ரேயாஸ் ஐயர் இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க : IND vs WI : 5 ஆவது டி20 போட்டியில் ரோஹித், பண்ட், சூரியகுமார் யாதவ் விளையாடாதது ஏன்? – விளக்கம் இதோ

அவரது இந்த அதிரடியான ஆட்டம் காரணமாக இந்திய அணி 188 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து தற்போது விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது கிட்டத்தட்ட தோல்வியின் விளிம்பில் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement