அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக பத்து அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை அக்டோபர் 31-ஆம் தேதி மாலை 5 மணிக்கு அறிவித்தது. அந்த வகையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர் கொல்கத்தா அணியால் தக்க வைக்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஷ்ரேயாஸ் ஐயர் விடுவிக்கப்பட்டதற்கு காரணம் :
ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றாத கொல்கத்தா அணி அவரது தலைமையில் இந்த ஆண்டுதான் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் கொல்கத்தா அணியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டது பலரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயரை அணியில் தக்க வைக்காதது குறித்த உண்மை காரணத்தை கொல்கத்தா அணியின் சி.இ.ஓ வெங்கி மைசூர் விவரித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : எங்களுடைய அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலில் ஷ்ரேயாஸ் ஐயர் தான் நம்பர் ஒன் இடத்தில் இருந்தார். அவர்தான் இந்த ஆண்டும் கேப்டனாக செயல்படுவார் என்று நினைத்தோம்.
மேலும் அவரை சுற்றி தான் அணி கட்டமைக்கப்படும் என்றும் தீர்மானித்தோம். ஆனால் தற்போது அவர் அணியில் இல்லாததற்கு காரணம் அவர் மட்டும்தான். கொல்கத்தா அணி எந்த விதத்திலும் அவரை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. ஆனால் தன்னுடைய ஏலத்தின் விலை என்ன? என்பதை ஏலத்தில் பார்க்கவே அவர் அணியிலிருந்து வெளியேறினார்.
இதன் காரணமாகவே அவர் எங்கள் அணியில் இடம் பெறவில்லை. இனிமேல் ஷ்ரேயாஸ் ஐயருக்கு உரிய மரியாதை நாங்கள் எங்கள் தரப்பில் கொடுக்கவில்லை என்று யாரும் சொல்ல மாட்டார்கள் என்று நம்புகிறோம். நாங்கள் அவரை முதல் நபராக தக்க வைக்க விரும்பி அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். ஆனால் அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
இதையும் படிங்க : அவரோட ஆட்டம் நியூசிலாந்தை பின்தங்க வெச்சுடுச்சு.. ஆனா இதை வெச்சே இந்தியாவை வீழ்த்துவோம்.. அஜஸ் படேல்
அவர் சில காரணங்களுக்காக அணியிலிருந்து வெளியேறி தன்னுடைய மதிப்பை பரிசோதிக்க விரும்பியுள்ளார். இதன் காரணமாகவே அவர் எங்களது அணியில் இருந்து வெளியேறியுள்ளார் என வெங்கி மைசூர் கூறியது குறிப்பிடத்தக்கது.