ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது கடந்த ஆண்டு நடைபெற்ற 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இறுதிப்போட்டி வரை முன்னேறி கடைசியாக ஆர்.சி.பி அணியிடம் தோல்வியை சந்தித்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. ஆனாலும் கடந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியின் அந்த சிறப்பான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றிருந்தது.
இந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தான் கப் :
அதேபோன்று தற்போது நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் தொடரிலும் பஞ்சாப் அணி சிறப்பான செயல்பாட்டை தொடர்ந்து வருகிறது. நேற்று ஏப்ரல் 16-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய பஞ்சாப் அணி மும்பையை அதன் சொந்த மண்ணிலேயே 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மாபெரும் வெற்றியை ருசித்தது.
அதிலும் குறிப்பாக மும்பை அணி நிர்ணயித்த 196 ரன்கள் என்கிற இலக்கினை 16.3 ஓவரிலேயே வெறும் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து சேசிங் செய்து அசத்தலான வெற்றியை பெற்றது. நேற்று பஞ்சாப் பெற்ற இந்த வெற்றியோடு சேர்த்து இந்த ஆண்டு அவர்கள் விளையாடியுள்ள 5 போட்டிகளில் நான்கு வெற்றிகளுடன் முதலிடத்தில் வலுவான நிலையில் உள்ளனர். இந்நிலையில் இந்த 2026 ஐபிஎல் கோப்பை வெல்வதற்கு பஞ்சாப் கிங்ஸ் அணி தகுதியான அணி என்பதை சில புள்ளி விவரங்கள் நமக்கு காட்டுகின்றன.
கடந்த பல ஆண்டுகளாகவே சரிவை சந்தித்து வந்த பஞ்சாப் அணி ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன் பொறுப்பில் வந்ததிலிருந்து அசத்தலாக செயல்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 2025-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பஞ்சாப் அணி தாங்கள் சேசிங் செய்துள்ள 11 ஆட்டங்களில் 9 ஆட்டங்களில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையின் கீழ் பஞ்சாப் அணி தொடர்ச்சியாக மூன்று முறை மும்பை அணியை வீழ்த்தி அசத்தியுள்ளது.
இதையும் படிங்க : கே.எல் ராகுல் ராகுல் மற்றும் சாம்சன் ஆகியோருக்கு அடுத்து மாபெரும் சாதனையை நிகழ்த்திய – குவிண்டன் டி காக்
மற்ற அணிகள் எல்லாம் மும்பை அணியை வீழ்த்த கடினப்படும் வேளையில் பஞ்சாப் அணி எளிதாக அவர்களை வீழ்த்தி வருகிறது. மும்பை மட்டுமின்றி மற்ற பெரிய அணிகளுக்கு எதிராகவும் பஞ்சாப் அணி சிறப்பாக செயல்பட்டு வருவதால் நிச்சயம் இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றும் முதன்மை அணிகளில் ஒன்றாக பஞ்சாப் அணி இருக்கப்போவது நிச்சயம் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.



