இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 24-ஆவது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
குவிண்டன் டி காக் நிகழ்த்திய சாதனை :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை குவித்தது. பின்னர் 196 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 198 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் தற்போது முதல் இடத்திற்கு வலுவான நிலையில் முன்னேறியுள்ளது. அதே வேளையில் தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணியானது ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக துவக்க வீரராக விளையாடிய குவிண்டன் டி காக் சதமடித்து அசத்தினார்.
அந்தவகையில் இந்த போட்டியில் 60 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் என 112 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் கே.எல் ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு அடுத்து ஒரு தனித்துவமான சாதனையை ஐ.பி.எல் போட்டிகளில் டி காக் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :
இதையும் படிங்க : யுவ்ராஜ் சிங் கிட்ட நானும் பிராக்டீஸ் எடுத்துக்கிட்டேன்.. அப்போ அவர் என்கிட்ட சொன்னது இதுதான் – பிரப்சிம்ரன் சிங்
ஏற்கனவே ஐ.பி.எல் போட்டிகளில் குவிண்டன் டி காக் வெவ்வேறு 2 அணிகளுக்காக சதமடித்துள்ளார். இந்நிலையில் நேற்று மும்பை அணிக்கு எதிராக சதம் அடித்துள்ளார். இப்படி நேற்று அடித்த சதத்தின் மூலம் மூன்று வெவ்வேறு அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளில் சதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஏற்கனவே கே.எல் ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் 3 வெவ்வேறு அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளில் சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



