மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 24-வது லீக் போட்டியில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கும் முன்னேறியுள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
யுவராஜ் சிங்குடன் மேற்கொண்ட பயிற்சி குறித்து பேசிய : பிரப்சிம்ரன் சிங்
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் குவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக குவிண்டன் டி காக் 112 ரன்களையும், நமன் தீர் 50 ரன்களையும் குவித்தனர். பின்னர் 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது மும்பை அணியின் பந்துவீச்சை சிதறடித்து 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 198 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்ச பிரப்சிம்ரன் சிங் 80 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 66 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் 39 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என ஆட்டமிழக்காமல் 80 ரன்களை குவித்து அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். இந்நிலையில் போட்டி முடிந்த தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய பிரப்சிம்ரன் சிங் கூறியதாவது :
உண்மையிலேயே இந்த போட்டியின் பவர்பிளே ஓவர்களில் வெகுசில பந்துகளை மட்டுமே நான் எதிர்கொள்ள முடியும் என்பதனால் பந்துகளை கணக்கில் கொண்டு அதிரடியாக விளையாட ஆரம்பித்தேன். 6-7 பந்துகள் கிடைத்தால் கூட அடித்து விட வேண்டும் என்று நினைப்பிலேயே இருந்தேன். அந்த வகையிலே எனக்கு கிடைத்த பந்துகளை அடித்து விளையாடினேன். அதேபோன்று இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நான் நிறையவே பயிற்சி செய்துள்ளேன். அதிலும் குறிப்பாக யுவராஜ் சிங் உடன் பயிற்சியை மேற்கொண்டு சில விடயங்களை கற்றுக் கொண்டேன். அப்போது அவர் என்னிடம் கூறிய ஒரே விடயம் இதுதான் :
இதையும் படிங்க : ஒரு மேட்ச் மட்டுமில்ல.. ரோஹித் சர்மாவின் காயம் குறித்த முக்கிய அப்டேட்டை வழங்கிய – கேப்டன் பாண்டியா
“நீ விளையாடும் முறை சரியான ஒன்று, ஆனாலும் ஒரு நீண்ட இன்னிங்க்ஸை விளையாட வேண்டும்” அதை மட்டும் மனதில் வைத்து விளையாடு என்று கூறுவார். அப்படியே இந்த போட்டியில் நான் போட்டியை முடிக்கும் அளவிற்கு ஒரு நீண்ட இன்னிங்ஸ் விளையாடி உள்ளேன் அது மிகவும் மகிழ்ச்சி. 200 ரன்கள் சேசிங் எனும் போது பவர்பிளே ஓவர்களில் ரன்கள் வரவேண்டும். அந்த வகையிலேயே நாங்கள் இன்று பவர்பிளேவை டார்கெட் செய்து விளையாடினோம் என பிரப்சிம்ரன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.



