ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் இருபதாம் தேதி மதியம் 3.30 மணிக்கு முள்ளான்பூரில் 37வது போட்டி நடைபெற்றது. அதில் பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பெங்களூரு தங்களுடைய 5வது வெற்றியைப் பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக பேட்டிங் செய்து 20 ஓவரில் 157-6 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 33, சசாங் சிங் 31*, ஜோஸ் இங்லிஷ் 29 ரன்கள் எடுத்த நிலையில் பெங்களூருவுக்கு அதிகபட்சமாக க்ருனால் பாண்டியா, சுயஸ் சர்மா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்ததாக விளையாடிய பெங்களூரு 18.5 ஓவரில் 159-3 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. அதிகபட்சமாக விராட் கோலி 73*, தேவ்தூத் படிக்கல் 61 ரன்கள் எடுத்தனர்.
பஞ்சாப் தோல்வி:
அதன் காரணமாக பஞ்சாப் தங்களுடைய மூன்றாவது தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு சரிந்தது. பெங்களூரு மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. இந்நிலையில் இந்தப் போட்டியில் தங்களுடைய பேட்ஸ்மேன்கள் அனைவருமே முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடி நல்ல துவக்கத்தைப் பெற்றதாக பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார். ஆனால் அதை தாங்கள் நன்றாக பயன்படுத்தாதது தோல்விக்கு காரணமாக அமைந்ததாக அவர் கூறியுள்ளார்.
மறுபுறம் விராட் கோலி மற்றும் ஆர்சிபி அணியினர் சிறப்பாக விளையாடி வென்றதாக பாராட்டிய அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “எனது காயம் லேசானது என்பதால் இந்தப் போட்டி முடிந்ததும் சரியாகி விடும். எங்களுடைய பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடச் சென்றனர். ஆனால் எங்களுக்கு கிடைத்த நல்ல துவக்கத்தை எங்களால் பயன்படுத்த முடியவில்லை”
கோலிக்கு பாராட்டு:
“அதற்கேற்றார் போல் பிட்ச் நேரம் செல்ல செல்ல ஸ்லோவாக மாறியது. அதனால் மிடில் ஓவர்களிலும் நாங்கள் எதிரணி பவுலர்களை அதிரடியாக எதிர்கொள்ள முயற்சித்தும் வேலையாகவில்லை. விராட் கோலி மற்றும் அவர்களுடைய பையன்களுக்கு பாராட்டுக்கள். பிட்ச்க்கு தகுந்தார் போல் எங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து பேசுகிறோம்”
இதையும் படிங்க: இன்றைய போட்டியில் அறிமுகமானதன் மூலம் சி.எஸ்.கே அணிக்காக மாபெரும் சாதனை நிகழ்த்திய – ஆயுஷ் மாத்ரே
“எங்களுடைய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் சிலர் முன்னே வந்து அதிரடியாக விளையாட வேண்டும். நான் நல்ல மனநிலைக்கான இடைவெளியில் இருக்கிறேன். 10 ரன்கள் தாண்டுவது போன்ற நல்ல துவக்கம் மட்டுமே எனக்குத் தேவை. அதே போல சுதந்திரமான துவக்கமும் எனக்கு வேண்டும். இங்கிருந்து எங்களுக்கு 6 நாட்கள் இடைவெளி இருக்கிறது. எனவே மீண்டும் வரைபலைகைக்கு சென்று முன்னேற்றத்தை சந்திப்பதற்கான விஷயங்களை பார்ப்பது முக்கியம்” எனக் கூறினார்.



