- Advertisement -
ஆசிய கோப்பை

இதை செஞ்சும் கழற்றி விட்டு விரக்தியடைய விட்டாங்க.. நமக்கு இந்தியாவின் வெற்றியே முக்கியம்.. ஸ்ரேயாஸ் பேட்டி

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி துவங்க உள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறும் அத்தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் கழற்றி விடப்பட்டதை அனைவரும் விமர்சித்தார்கள். ஏனெனில் 2024 ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வென்ற அவர் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் குவித்து இந்தியா கோப்பையை வெல்ல உதவினார்.

மேலும் 2025 ஐபிஎல் தொடரில் 604 ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்த அவர் 11 வருடங்கள் கழித்து பஞ்சாப்பை ஃபைனல் அழைத்துச் சென்றார். அந்த வகையில் நல்ல ஃபார்மில் இருக்கும் அவருக்கு ஆசியக் கோப்பையில் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இடம் கிடைக்கவில்லை. குறிப்பாக சுப்மன் கில்லை கேப்டனாக வளர்ப்பதற்காக அவர் கழற்றி விடப்பட்டது பெரும்பாலான ரசிகர்களை கோபமடைய வைத்தது.

- Advertisement -

விரக்தியில் ஸ்ரேயாஸ்:

அது பற்றி கேட்டதற்கு யாருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயரை தேர்ந்தெடுப்பது என்று நீங்களே சொல்லுங்கள்? என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் பதிலளித்தார். இந்நிலையில் இந்திய அணிக்காக சிறப்பாக பேட்டிங் செய்து ஐபிஎல் தொடரில் கேப்டனாக அசத்தியும் ஆசியக் கோப்பையில் கழற்றி விடப்பட்டது ஏமாற்றமளிப்பதாக ஸ்ரேயாஸ் ஐயர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தமக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்ட வீரரும் மோசமானது கிடையாது என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே இந்தியா வெற்றி பெறுவது முக்கியம் என்று ஆதரவளிக்கும் அவர் கம்பேக் கொடுப்பதற்காக தொடர்ந்து கடினமாக உழைப்பேன் எனக் கூறியுள்ளார். இது பற்றி ஸ்ரேயாஸ் பேசியது பின்வருமாறு. “நீங்கள் பிளேயிங் லெவனில் விளையாடுவதற்கு தகுதியானவராக வாய்ப்பு கிடைக்காதது விரக்தியை மட்டுமே ஏற்படுத்தும்”

- Advertisement -

இந்தியாவுக்கு ஆதரவு:

“அந்த (அணி அறிவிக்கப்பட்ட) சமயத்தில் கண்டிப்பாக அது விரக்தியை கொடுத்தது. அதே சமயம் ஒருவர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடுவதால் அணிக்குள் கொண்டு வரப்படுகிறார். எனவே நீங்கள் அவர்களை ஆதரிக்க வேண்டும். நம்முடைய அணி வெற்றி பெறுவதே முதன்மை இலக்காகும். நம்முடைய அணி வெற்றி பெற்றால் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்”

இதையும் படிங்க: 72க்கு அவுட்.. 342 ரன்ஸ்.. இந்தியாவை முந்தி ஓடவிட்ட இங்கிலாந்து மெகா உலக சாதனை.. தெ.ஆ 2 மோசமான சாதனை

“ஆனால் நேர்மையாக பேச வேண்டுமெனில் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் நீங்கள் உங்கள் வேலை நெறிமுறைகளை சரியாக செய்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். யாராவது பார்க்கும் போது மட்டும் வேலை செய்வது போல் செயல்படக்கூடாது. யாரும் பார்க்காத போதும் உங்களுடைய வேலையை செய்து கொண்டே இருக்க வேண்டும்” என்று கூறினார். இதற்கிடையே ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடும் டெஸ்ட் தொடரின் இந்தியா ஏ அணி கேப்டனாக ஸ்ரேயாஸ் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -