- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இன்னும் 50 ரன்கள் மட்டுமே தேவை.. புதிய மைல்கல் சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – ஷ்ரேயாஸ் ஐயர்

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது ஆட்டமானது ஜூன் 26-ஆம் தேதியான இன்று நடைபெறவுள்ளது. இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக மீண்டும் ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளதால் அவரது ஆட்டம் எவ்வாறு இருக்கப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

முக்கிய சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் :

இவ்வேளையில் இன்றைய அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் விளையாட இருக்கும் டி20 அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு மிகப்பெரிய சாதனை மைல்கல்லை நோக்கி தனது பயணத்தை துவங்கவுள்ளார். அந்த வகையில் இன்றைய போட்டியில் அவர் நிகழ்த்த வாய்ப்புள்ள சாதனை யாதெனில் :

- Advertisement -

கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச போட்டியில் அறிமுகமான ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரை 51 டி20 போட்டிகளில் விளையாடி 1104 ரன்களையும், 79 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3035 ரன்களையும், 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 811 ரன்களையும் குவித்துள்ளார். இப்படி மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து அவர் இதுவரை 144 ஆட்டங்களில் விளையாடி 4950 ரன்கள் அடித்துள்ளார்.

இந்நிலையில் இன்றைய அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் 50 ரன்கள் விளாசம் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக மூன்று வகையான போட்டிகளில் சேர்த்து 5000 ரன்களை பூர்த்தி செய்ய காத்திருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலககோப்பை தொடரின் போது சச்சின் சார் கொடுத்த அந்த அட்வைஸ் ரொம்ப ஹெல்ப் பண்ணுச்சு – சஞ்சு சாம்சன் பேட்டி

ஐ.பி.எல் போட்டிகளில் அட்டகாசமான பேட்டிங் மற்றும் கேப்டன்சி என அமர்க்களப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயர் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பதால் அவரது ஆட்டத்தின் மீது அனைவரது பார்வையும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -