என்னடா இது சோதனை.. ஷ்ரேயாஸ் ஐயரும் ஐ.பி.எல் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் – விளையாடுவது சந்தேகம்

Shreyas-Iyer
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் நடைபெற உள்ள 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது வரும் மார்ச் 22-ஆம் தேதி கோலாகலமாக துவங்க இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. அதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் இரட்டிப்பாகியுள்ளது.

இன்னும் இந்த தொடரானது துவங்க சில நாட்களே எஞ்சியுள்ள வேளையில் ஒவ்வொரு அணியிலிருந்தும் சில நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாகவும், தனிப்பட்ட காரணங்களுக்காகவும் வெளியேறி வருவது சம்பந்தப்பட்ட அணிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே பல்வேறு அணிகளை சேர்ந்த நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக வெளியேறிய வேளையில் தற்போது கொல்கத்தா அணியின் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர் இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்மையில் பிசிசிஐ-யின் வருடாந்திர வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் விதர்பா அணிக்கெதிராக மும்பை அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 7 ரன்களை மட்டுமே அடித்த அவர் இரண்டாவது இன்னிங்ஸின் போது 95 ரன்கள் அடித்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

இருப்பினும் இந்த போட்டியின் இடையில் அவருக்கு முதுகு பிடிப்பு ஏற்பட்டதன் காரணமாக போட்டியின் நான்காம் நாள் முழுவதுமாக அவர் பீல்டிங் செய்யவில்லை. ஏற்கனவே முகுது பகுதியில் ஏற்பட்ட காயத்தினாலேயே அவர் கடந்த ஆண்டு 2023 ஐபிஎல் தொடர் முற்றிலும் விளையாடாமல் இருந்த வேளையில் அதற்கான அறுவை சிகிச்சையும் மேற்கொண்டு இருந்தார்.

இதையும் படிங்க : இது குஜராத் கிடையாது.. பாண்டியாவுக்காக ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட மும்பை பற்றி யுவராஜ் சிங்

தற்போது அண்மையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போதும் முதுகுப்பிடிப்பு காரணமாக வெளியேறியிருந்த அவர் மீண்டும் அதே பிரச்சனையால் அவதிப்பட்டு வருவது மருத்துவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை அவரது காயம் தீவிரமாக இருந்தால் இந்த ஐபிஎல் தொடரின் பல போட்டிகளை அவர் தவறவிடவும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement