மேலும் ஒரு இந்திய வீரர் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலக வாய்ப்பு – மிகப்பெரிய பின்னடைவு

Shreyas-Iyer
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை முதல் இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று இந்த தொடரில் (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றன. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 15-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் இந்த தொடரின் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் அடுத்த மூன்று போட்டிகளில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

அந்த வகையில் வலைப் பயிற்சியின்போது ஷ்ரேயாஸ் ஐயர் முதுகில் தசைப் பிடிப்பையும், இடுப்பில் வலியையும் உணர்ந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவருக்கு தற்போது எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவர் முதுகுப்பகுதியில் காயம் காரணமாக அவதிப்படுவது தெரியவந்துள்ளது.

அதனால் மற்ற இந்திய வீரர்களின் கிட பேக் விசாகப்பட்டினத்தில் இருந்து ராஜ்கோட் வந்தடைந்த வேளையில் ஷ்ரேயாஸ் ஐயரின் கிட் பேக் மட்டும் மும்பைக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் மூன்று போட்டிகளில் அவர் இடம்பெறுவது சந்தேகமாகியுள்ளது.

- Advertisement -

மேலும் விரைவில் அவர் பெங்களூரு சென்று தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல் பரிசோதனைகளை மேற்கொள்ள இருக்கிறார் என்றும் அதன் பிறகே அவர் இந்த தொடரில் பங்கேற்பாரா? மாட்டாரா? என்பது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : யார் ஸ்க்ப்ரிட் சொல்லிக் கொடுத்தா? தனது தந்தையின் விமர்சனத்துக்கு ஜடேஜா.. கொடுத்த பதிலடி என்ன

ஏற்கனவே கடந்த ஆண்டு முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர் அதன் பிறகு இந்திய அணியில் இணைந்த வேளையில் தற்போது மீண்டும் முதுகுப்பகுதியில் வலியை உணர்ந்து, காயம் அடைந்துள்ளது வருத்தமான விடயமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement