IPL 2022 : ஆர்.சி.பி அணி கேப்டனாக வாங்க இருக்கும் வீரர் இவர்தானாம் – யார் தெரியுமா?

RCB
- Advertisement -

இந்தியாவில் நடைபெற இருக்கும் 15-வது ஐபிஎல் தொடருக்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்கள் அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்ட வேளையில் மீதமுள்ள வீரர்கள் வரும் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்கின்றனர். இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு தேர்வு செய்ய இருக்கின்றனர்.

bharat 1
bharat RCB

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக புதிய கேப்டன் செயல்பட இருக்கிறார். ஏனெனில் ஏற்கனவே அந்த அணியின் கேப்டனாக பல ஆண்டுகள் செயல்பட்டு வந்த விராட் கோலி கடந்த சீசனில் தனது கேப்டன் பதவியில் இருந்து வெளியேறியதால் இந்த ஆண்டு அவர் ஆர்சிபி அணியில் ஒரு வீரராக இருக்கிறார். இதன் காரணமாக தற்போது ஆர்சிபி அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ஆர்சிபி அணி மூன்று வீரர்களை மட்டுமே தக்கவைத்துள்ள வேளையில் புதிதாக ஒரு வீரரை ஏலத்தில் எடுத்து அவரையே கேப்டன் ஆக மாற்றும் என்று தெரிகிறது. அந்த வகையில் ஆர்சிபி அணியை தலைமை தாங்கும் வாய்ப்பு டெல்லி அணியில் இருந்து வெளியேறிய ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த 2019-20 ஆம் ஆண்டு டெல்லி அணியை வழிநடத்திய ஸ்ரேயாஸ் அய்யர் தனது அற்புதமான கேப்டன்சி மூலம் டெல்லி அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்றார்.

iyer

ஆனால் கடந்த சீசனில் காயம் காரணமாக கேப்டன்சி வாய்ப்பை தவற விட்ட அவர் தற்போது டெல்லியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளதால் மீண்டும் அந்த அணிக்கு திரும்பும் மாட்டார் என்றே தெரிகிறது. இதன் காரணமாக நிச்சயம் அவரை ஏலத்தில் எடுக்க பல அணிகள் போட்டி போடும். அதில் குறிப்பாக தற்போது கடந்த சில ஆண்டுகளாகவே மிடில் ஆர்டர் பிரச்சினையில் தவித்து வரும் பெங்களூர் அணி அவரை ஏலத்தில் எடுத்து 4-வது வீரராக விளையாட வைப்பது மட்டுமின்றி கேப்டனாகவும் மாற்ற இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : அவங்க 4 பேரையும் இந்தியன் டீம் செலக்ட் பண்ணது ரொம்ப கரெக்ட்டான முடிவு – யுவ்ராஜ் சிங் மகிழ்ச்சி

அப்படி அவர் கேப்டனாக செயல்படும் பட்சத்தில் நான்காவது இடத்தில் களமிறங்கி பெங்களூர் அணியின் பேட்டிங் வரிசை படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுதவிர விராட் கோலி, மேக்ஸ்வெல் ஆகியோர் இருப்பதனால் நிச்சயம் அவர்களது அனுபவமும் உதவும் என்கிற காரணத்தினால் ஷ்ரேயாஸ் ஐயர் பெங்களூர் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டு கேப்டனாக நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement