செஞ்சுரியை தவறவிட்டாலும் ரசிகர்கள் மத்தியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு கிடைத்த மரியாதை – இதை கவனிச்சீங்களா?

Shreyas-iyer-2
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மார்ச் 12ஆம் தேதி இன்று பகலிரவு போட்டியாக துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதன்படி துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர்.

shreyas iyer

- Advertisement -

சிறப்பான துவக்கத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மாயங்க் அகர்வால் 4 ரன்களிலும், ரோகித் சர்மா 15 ரன்களிலும் ஆட்டம் இழந்து வெளியேற இந்திய அணி 29 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து துவக்கத்திலேயே சரிவை சந்தித்தது. பின்னர் விகாரி(31), விராட் கோலி(23), ரிஷப் பண்ட் (39) என அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் இந்திய அணி 126 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இப்படி ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்து கொண்டே இருந்தாலும் மறுபுறத்தில் அனைத்து வீரர்களுடன் இணைந்து ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பான பார்ட்னர்ஷிப் விளையாடினார். கடந்த போட்டியில் சதம் விளாசிய ஜடேஜா இம்முறை 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் அஸ்வின் 13 ரன்களிலும், அக்ஷர் பட்டேல் 9 ரன்களிலும், ஷமி 5 ரன்களிலும் ஆட்டம் இருந்து வெளியேற ஒருபுறம் தனது விக்கெட்டை கெட்டியாகப் பிடித்து விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் கிடைக்கும் இலகுவான பந்துகளை எல்லாம் பவுண்டரிகள் விளாசினார். இறுதியில் 98 பந்துகளை சந்தித்த அவர் 10 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்கள் என 92 ரன்கள் குவித்து கடைசி வீரராக ஆட்டமிழந்து வெளியேறினார்.

shreyas iyer 3

ஒருகட்டத்தில் டெய்ல் என்டர்களை வைத்து சிறப்பாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் அய்யர் நிச்சயம் சதம் விளாசுவார் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். அந்த எதிர்பார்ப்பின் படியே சதத்தை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த ஸ்ரேயாஸ் அய்யர் 92 ரன்கள் இருந்தபோது சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு இறங்கிவந்து ஸ்டம்பிங் மூலம் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி முதல் இன்னிங்சில் 252 ரன்களை குவித்தது. அதனை தொடர்ந்து தற்போது இலங்கை அணியானது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது சதத்தை தவறவிட்டாலும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரசிகர்கள் கொடுத்த ஆரவாரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏனெனில் இந்திய அணி 252 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தாலும் அதில் முக்கியமான பங்கை ஆறாவது வீரராக களம் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் தனது அதிரடியின் மூலம் வழங்கினார். சதத்தை தவறவிட்டாலும் அவரின் இந்த சிறப்பான இன்னிங்ஸ்சிற்காக மைதானத்தில் இருந்த அனைத்து ரசிகர்களும் எழுந்து நின்று கைத்தட்டி ஆரவாரம் செய்து அவரை கௌரவித்து வரவேற்றனர்.

இதையும் படிங்க : ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆர்சிபி கேப்டன் இவர்தான் – புதிய ஜெர்ஸியும் அறிமுகம் (எப்படி இருக்கு?)

அதேபோன்று இந்திய அணியின் ஓய்வறையில் இருந்த வீரர்கள், நிர்வாகிகள் என அனைவரும் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அதனை தொடர்ந்து தற்போது முதல் இன்னிங்சை விளையாடி வரும் இலங்கை அணியானது முதல் நாள் ஆட்டநேர முடிவில் 86 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் பின்தங்கிய நிலையில் தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement