ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆர்சிபி கேப்டன் இவர்தான் – புதிய ஜெர்ஸியும் அறிமுகம் (எப்படி இருக்கு?)

RCB
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்கி 2 மாதங்கள் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது. இந்த முறை லக்னோ மற்றும் குஜராத் ஆகிய புதிய 2 அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய ஐபிஎல் தொடர் 65 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் நடைபெற உள்ள 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றுக்கான முழு அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதன்படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் யார் என்ற மிகப்பெரிய கேள்வி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவி வந்தது.

- Advertisement -

பெங்களூரு கேப்டன் யார்:
ஏனெனில் கடந்த 2013 முதல் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த நட்சத்திர வீரர் விராட் கோலி தம்மால் முடிந்த அளவுக்கு முழு மூச்சுடன் சிறப்பாகச் செயல்பட்டு மலைபோல் ரன்களைக் குவித்த போதிலும் அந்த அணிக்காக ஒரு கோப்பையை கூட வாங்கித் தர முடியவில்லை. இதனால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வந்த அவர் பணிச்சுமை காரணமாக சமீபத்தில் இந்திய கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகினார்.

இதனால் அந்த அணி ரசிகர்கள் சோகமாக இருந்த நிலையில் கடந்த மாதம் நடந்த வீரர்கள் ஏலத்தில் தங்களின் புதிய கேப்டனை தேர்வு செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவெடுத்திருந்தது. குறிப்பாக ஷ்ரேயஸ் ஐயர் போன்ற கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த இளம் வீரரை வாங்கி தங்கள் அணியின் கேப்டனாக நியமிக்க அந்த அணி விருப்பம் தெரிவித்தது.

- Advertisement -

ஆனால் 12.25 கோடிக்கு அவரை தட்டித் தூக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் தங்களின் புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. இதனால் ஏமாற்றமடைந்த பெங்களூர் அணி நிர்வாகம் தங்களின் புதிய கேப்டன் யார் என்ற முடிவை எடுப்பதில் மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்தது. குறிப்பாக பஞ்சாப் கிங்ஸ் போன்ற அணிகள் தங்களின் புதிய கேப்டனை அறிவித்த போதிலும் பெங்களூர் அணி நிர்வாகம் புதிய கேப்டனை அறிவிப்பதில் மௌனம் காத்து வந்தது.

புதிய கேப்டன் பஃப் டு பிளேஸிஸ்:
இதனால் தங்களின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடையே பல மடங்கு அதிகரித்தது. இந்நிலையில் அந்த அணியின் புதிய கேப்டன் யார் என்பதை அந்த அணி நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக பெங்களூருவில் உள்ள மியூசியம் சாலையில் பிரத்தியேக நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டதை அடுத்து அந்த நிகழ்ச்சியில் கூட்டம் அலைமோதியது. இதை அடுத்து ஐபிஎல் 2022 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் புதிய கேப்டனாக “பஃப் டு பிளேஸிஸ்” அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த பல வருடங்களாக முக்கிய முதுகெலும்பு வீரராக விளையாடி வந்த அவர் கடந்த வருடம் 633 ரன்கள் குவித்து அந்த அணி 4-வது முறையாக கோப்பையை வெல்ல மிகவும் முக்கிய பங்காற்றினார். தற்போது நல்ல பார்மில் இருக்கும் அவர் ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவுக்காக 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டன்ஷிப் செய்த அனுபவம் கொண்டவர். இந்த அறிவிப்பு நிகழ்ச்சியில் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட டு ப்லஸ்ஸிஸ், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், முக்கிய பெங்களூரு அணி நிர்வாகிகள் பங்கு கொண்டனர்.

ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு முன் நிகழ்ந்த இந்த நிகழ்ச்சிசியில் ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூர் அணி வீரர்கள் அணிந்து விளையாடும் புதிய ஜெர்ஸியும் வெளியிடப்பட்டது. இப்படி புதிய கேப்டன் மற்றும் ஜெர்சியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம் அறிவித்துள்ளதால் அந்த அணி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள். மேலும் பப் டு பிளேஸிஸ் தலைமையில் விராட் கோலி விளையாடி முதல் முறையாக பெங்களூர் அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடையே ஏற்பட்டுள்ளது.

Advertisement