- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணியில் இடம் இல்லனா என்ன? 2 கோப்பைகளுடன் கெத்து காட்டும் ஷ்ரேயாஸ் ஐயர் – விவரம் இதோ

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர ஆட்டக்காரரான ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த சில மாதங்களாகவே இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வந்தாலும் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் முனைப்புடன் வெகு சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் நடைபெற்று முடிந்த சையத் முஷ்டாக் அலி தொடரிலும் அவரது செயல்பாடு திருப்தி அடையும் விதமாகவே இருந்தது.

2 கோப்பைகளை வென்ற ஷ்ரேயாஸ் ஐயர் :

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த அவர் அந்த அணிக்கு சாம்பியன் பட்டம் பட்டத்தினை வென்று கொடுத்திருந்தார். அதற்கடுத்து தற்போது சையத் முஷ்டாக் அலி தொடரிலும் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டிருந்தார்.

- Advertisement -

அவரது தலைமையிலான மும்பை அணியானது நேற்று நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டியில் மத்திய பிரதேச அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சையத் முஷ்டாக் அலி தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதன் மூலம் ஷ்ரேயாஸ் ஐயர் ஒரே ஆண்டில் இரண்டு டி20 கோப்பைகளை வென்ற முதல் கேப்டனாக அசத்தலான சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதுவரை ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற எந்தவொரு கேப்டனும் உள்ளூர் தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரிலோ அல்லது ரஞ்சி தொடரிலோ, விஜய் ஹசாரே தொடரிலோ சாம்பியன் பட்டத்தை வென்றது கிடையாது.

- Advertisement -

ஆனால் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக சாம்பியன் பட்டம் பெற்ற ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது மும்பை அணியின் கேப்டனாகவும் சையத் முஷ்டாக் அலி தொடரினை வென்றுள்ளார். இதன் மூலம் ஐபிஎல் தொடர் மற்றும் உள்ளூர் தொடர் என இரண்டு வகையான டி20 கோப்பைகளையும் ஒரே ஆண்டில் பெற்றுக் கொடுத்த முதல் கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க : தம்பி இது பிராக்டீஸ் இல்ல.. 5 நிமிடம் 2 பந்தில் ஸ்டார்க் வலையில் விழுந்த ஜெய்ஸ்வால் கலாய்த்த மைக்கேல் வாகன்

அண்மையில் நடைபெற்று முடிந்த 2025 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் மெகா ஏலத்தில் கலந்து கொண்ட அவரை பஞ்சாப் கிங்ஸ் அணியானது 26 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு வாங்கி உள்ளதால் அவரே அடுத்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருப்பார் என்று தெரிகிறது.

- Advertisement -