அப்படியே போய்டுங்க.. ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷானுக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ.. வெளியான அறிவிப்பு

Ishan kishan and shreyas iyer
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 4 போட்டிகளின் முடிவிலேயே இந்தியா வென்றுள்ளது. முன்னதாக இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் சுமாராக விளையாடிய கேஎஸ் பரத்துக்கு பதிலாக விக்கெட் கீப்பர் இசான் கிசானை தேர்வு செய்ய இந்திய அணி நிர்வாகம் விரும்பியது. ஆனால் கடந்த தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டதாக சொல்லி வெளியேறிய அவர் மேற்கொண்டு எந்த கிரிக்கெட்டிலும் விளையாடாமல் இருந்தார்.

அதனால் இந்திய அணிக்கு மீண்டும் உங்களை தேர்வு செய்ய ரஞ்சிக் கோப்பையில் விளையாடி தயாராக இருங்கள் என்று அவருக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அறிவுரை வழங்கினார். ஆனால் அதைக் கேட்காத இஷான் கிசான் பரோடாவுக்கு சென்று பாண்டியா சகோதரர்களுடன் சேர்ந்து 2024 ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான வேலைகளில் ஈடுபட்டார்.

- Advertisement -

கழற்றிவிட்ட பிசிசிஐ:
அதற்கிடையே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் லேசாக காயமடைந்து வெளியேறிய ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு வாரத்திலேயே குணமடைந்ததால் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு என்சிஏ அறிவுறுத்தியது. ஆனால் அதை கேட்காத அவர் பரோடாவுக்கு எதிராக நடந்த காலிறுதிப் போட்டியில் மும்பை அணிக்காக ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை.

அப்போது இந்திய அணியின் மத்திய சம்பள ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ள அனைத்து வீரர்களும் ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் ரஞ்சிக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா எச்சரிக்கை கடிதம் வெளியிட்டார். ஆனால் அப்போதும் அவருடைய பேச்சை கேட்காத இஷான் கிசான் ஐபிஎல் 2024 தொடரில் மும்பை அணிக்கு விளையாட தயாராவதற்காக நேற்று துவங்கிய டிஒய் பாட்டீல் உள்ளூர் டி20 தொடரில் விளையாடினார்.

- Advertisement -

இந்நிலையில் 2023 – 24 காலண்டர் வருடத்திற்கான இந்திய அணியின் மத்திய சம்பள ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் பிசிசிஐ அறிவுறுத்தியும் ரஞ்சிக் கோப்பையில் விளையாட மறுத்த இஷான் கிசான் ஏற்கனவே இடம் வகித்த சி பிரிவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அதே போல காயம் என்று சொல்லி ரஞ்சிக்கோப்பை காலிறுதியில் விளையாடாத ஸ்ரேயாஸ் ஐயரும் ஏற்கனவே இடம் வகித்த பி மத்திய சம்பள ஒப்பந்தப் பிரிவிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஐசிசி டெஸ்ட் தரவரிசை : ரோஹித்தை முந்திய ஜெய்ஸ்வால்.. வேகமாக முன்னேறும் துருவ் ஜுரேல், குல்தீப் யாதவ்

அதாவது ராகுல் டிராவிட், ஜெய் ஷா ஆகியோர் சொல்லியும் அதை ஏற்காத இந்த 2 வீரர்களையும் தேர்வுக் குழுவின் பரிந்துரைப்படி விடுவிப்பதாக அறிவித்துள்ள பிசிசிஐ “அப்படியே போய் விடுங்கள்” என்பது போல் கழற்றி விட்டுள்ளது. இதனால் பெரிய பின்னடைவை சந்தித்துள்ள இஷான் கிசான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் வருங்காலங்களில் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படுவதற்கு முன்னுரிமை பெற மாட்டார்கள். மேலும் இந்தியாவுக்காக மீண்டும் அவர்கள் தேர்வாக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி கடினமாக போராட வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடப்பட்டது.

Advertisement