டெல்லி மற்றும் கொல்கத்தா அணிக்கு இடையான ஐபில் போட்டியில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் டெல்லி அணியின் புதிய கேப்டனாக களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 93 ரன்களை குவித்து அசத்தினார் .
Last over!https://t.co/pW0zBWR0FI
— Videos Shots (@videos_shots) April 27, 2018
மேலும் அந்த போட்டியின் இறுதி ஒவேரில் சிவம் மவி வீசிய பந்துகளை பௌண்டரிகளாக தெறிக்கவிட்டார் ஷ்ரேயாஸ் ஐயர். இவர் அந்த ஒவேரில் மட்டும் 3 சிக்ஸர் மற்றும் ஒரு 4 ஐ விளாசி 29 ரன்களை குவித்தார்.இதன் மூலம் அந்த போட்டியில் மொத்தம் 10 சிக்ஸர்கள் மற்றும் 4 போர்கள் என விளாசினார் ஷ்ரேயாஸ் ஐயர் .
நேற்று நடந்த போட்டியில் டெல்லி அணி ஆடிய அந்த கடைசி ஓவர் தான் ரசிகர்களின் மிகுந்த ஆராவாரத்தை பெற்றது. தற்போது அந்த வீடியோ சமூக பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. நீங்களும் அந்த வீடியோ பதிவை கண்டு மகிழுங்கள்