நான் மட்டுமல்ல பாகிஸ்தான் அணியே இவங்க 2 பேர் பந்துவீச்சுக்கு எதிரா விளையாட கஷ்டப்படும் – சோயிப் மாலிக் ஓபன்டாக்

கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக சர்வதேச போட்டிகளில் அறிமுகமான பல வீரர்கள், பின்னாளில் கிரிக்கெட் விளையாட்டில் மிகத் திறமையான வீரர்களாக மாறியதோடு மட்டுமல்லாமல் அவர்களின் தேசிய அணியில் ஒரு தவிர்க்க முடியாத வீரராகவும் உருவெடுத்துள்ளனர். அதுபோன்ற வீரர்களில் ஒருவர்தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனாகவும் அந்த அணியின் முக்கியமான வீரராகவும் திகழ்ந்த சோயிப் மாலிக். இந்திய அணிக்கு எதிராக எப்போதுமே மிகச் சிறப்பாக விளையாடி இருக்கும் அவர், இந்திய அணியில் இடம்பெற்றிருந்த இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளில் மட்டும் எப்போதுமே தடுமாற்றத்துடனேயே விளையாடி இருக்கிறார்.

malik 1

அந்த இரண்டு இந்திய பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நான் ஏன் தடுமாற்றத்துடனேயே விளையாடினேன் என்ற காரணத்தை தற்போது சொல்லியிருக்கிறார் சோயிப் மாலிக். இது குறித்து பேசிய அவர், இந்திய அணியில் இடம்பெற்றிருந்த இரண்டு இடது கை வேகப் பந்து வீச்சாளர்களான ஜாஹீர் கான் மற்றும் ஆஷிஸ் நெஹ்ரா ஆகிய இருவரும், எப்போதுமே பேட்ஸ்மேன்களின் பேட்டின் முனையை குறிவைத்து தான் பந்துகளை வீசுவார்கள். பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர்கள் இருவரும் அதிகமான விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.

- Advertisement -

பேட்டின் முனைகளை குறிவைத்து பந்து வீசும் ஒரு பௌலர்தான் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக மாற முடியும். அவர்கள் இருவரின் பந்துகளும் அதிகமாக அவுட் ஸ்விங் ஆகும். அதனால் தான் நான் அவர்களின் பந்து வீச்சில் திணறினேன் என்றும் என்னைப்போன்று பாகிஸ்தான் அணியில் பல பேர் திணறினர் என்றும் அவர் கூறியுள்ளார். 1999ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணியில் அறிமுகமாகிய சோயிப் மாலிக், இதுவரை இந்திய அணிக்கு எதிராக 46.89 என்ற சிறப்பான அவ்ரேஜில் 1782 ரன்களை குவித்துள்ளார்.

malik 1

அந்த பேட்டியில் மேலும் பேசிய அவர், இந்திய அணியில் இடம்பெற்றிருந்த மற்றொரு இடது கை வேகப் பந்து வீச்சாளரான இர்பான் பதானுக்கு எதிராக விளையாடியது மிக எளிதாக இருந்தது என்றும் கூறினார். அது பற்றி பேசிய அவர், இர்பான் பதானுக்கு எதிராக நான் சிறப்பாக விளையாடியதற்கு, அவர் வீசிய இன் ஸ்விங் பந்துகளே காரணமாக இருந்தது. அதுபோன்ற பந்துகளில் நான் சிறப்பாக விளையாடுவேன்.

- Advertisement -

Nehra

அவருடைய ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் அதிகமான அவுட் ஸ்விங் பந்துகளை வீச சிரமப்பட்டார். எனவே அவருக்கு எதிராக என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். இர்பான் பதானுக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் 90 என்ற மிகச் சிறந்த அவ்ரேஜில் சோயிப் மாலிக் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement