எனக்கு இந்த பதவி மட்டும் கொடுங்க. இந்திய பவுலர்களை வேறலெவலில் மாத்தி காட்டுறேன் – அக்தர் ஓபன் டாக்

Akhtar
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் இருக்கும் விளையாட்டு வீரர்களும் தற்போது ஓய்வில் இருக்கும் நேரத்தில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் சமூக வலைதளம் மூலமாக தங்களது அனுபவங்கள் மற்றும் கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்த வண்ணம் உள்ளனர். அதன்படி பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் ஹலோ நேர்காணலில் கலந்துகொண்டு ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

Akhtar

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்படும் வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் : நிச்சயம் இந்த வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக மாறுவதற்காக ஆர்வமாக உள்ளேன். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் : வாய்ப்பு கிடைத்தால் மிகவும் ஆக்ரோஷமான வேகமான பந்துவீச்சாளர்களை இந்திய அணிக்காக உருவாக்குவேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் எதிர்காலத்தில் இந்திய பந்துவீச்சு பிரிவுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறீர்களா ? என்ற கேள்விக்கு நான் நிச்சயம் செய்வேன், அறிவுரையை பரப்புவதே எனது வேலை நான் என்ன வேகப்பந்து வீச்சில் கற்றுக்கொண்டேனோ அதனை நிச்சயம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பரப்புவேன் என்று அவர் கூறினார்.

Akhtar 1

தற்போது இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண் இருந்து வருகிறார். அந்தப் பணியைத்தான் அக்தர் செய்ய வேண்டும் என்று இந்த நேர்காணலில் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் தற்போது இருக்கும் வீரர்களைக் காட்டிலும், அதிக ஆக்ரோஷமான வேகம் நிறைந்த மற்றும் அதிக வேகம் கூடிய பந்துவீச்சாளர்களை என்னால் உருவாக்க முடியும் என்றும் வாக்குறுதி அளித்தார்.

- Advertisement -

வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்கள் இடையே தனது அனுபவத்தை பகிர்ந்து அவர்களை சிறப்பாக செயல்பட வைக்க விரும்புவதாகவும், கிரிக்கெட்டில் அதிவேகப் பந்து வீச்சாளர்களை உருவாக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். சச்சின் குறித்து பேசுகையில் 1998 ஆம் ஆண்டு அவருடன் விளையாடிய காலங்களில் அவரை பார்த்து ஆச்சரிப்பட்டுள்ளேன்.

Akhtar

அவருக்கு இந்தியாவில் பெரிய பெயர் உள்ளது என்று எனக்கு தெரியவில்லை. சென்னையில் விளையாடிய போது சச்சின் இந்திய கிரிக்கெட் கடவுளாக அறியப் பட்டார் என்பதை நான் உணர்ந்தேன். மேலும் அவர் என்னுடைய மிகச் சிறந்த நண்பர் 1998 ஆம் ஆண்டில் என்னால் முடிந்த வரை வேகமாக பந்து வீசிய போது இந்திய மக்கள் என்னை கொண்டாடினர். இந்தியாவிலும் எனக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement