இதெல்லாம் நியாயமே இல்ல. தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர் அவர்தான் – அக்தர் ஆதங்கம்

Akhtar
Advertisement

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய மிட்சல் மார்ஷ்-க்கு ஆட்டநாயகன் விருதும், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னருக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

warner

பாகிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் வார்னர் 30 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார். அதேபோன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய அவர் 38 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். இந்த இரண்டு முக்கியமான போட்டிகளிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது என பரிசளிப்பு விழாவின் போது தெரிவிக்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் தற்போது இந்த தொடர் நாயகன் விருதுக்கு டேவிட் வார்னர் தகுதியுடையவர் கிடையாது என்றும் பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் தான் தகுதியானவர் என்றும் பாகிஸ்தான் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

azam 1

இந்தத் தொடரில் டி20 உலகக்கோப்பை தொடரை பாபர் அசாம் 303 ரன்களை குவித்து அதிக ரன்கள் அடுத்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதேவேளையில் வார்னர் 289 ரன்களுடன் 2-வது இடத்தில் தான் உள்ளார். 4 அரைசதங்கள் உடன் அதிக ரன்களை குவித்த ஒரு வீரருக்கு தொடர் நாயகன் விருதை கொடுக்காமல் டேவிட் வார்னருக்கு வழங்கியது நியாயமற்றது என்று அக்தர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : இனிமேலாவது இவரை அணியில் இருந்து தூக்காம இருங்க. கம்பேக் கொடுத்த வீரருக்கு – குவியும் ஆதரவு

பாகிஸ்தான் வீரரான பாபர் அசாமை ஆதரித்து தனது கருத்தை தெரிவித்து இருந்தாலும் அவரின் கருத்து ஏற்றுக்கொள்ளும்படியே உள்ளது. அதேபோன்று பல்வேறு முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் இந்த தொடரின் தொடர் நாயகன் குறித்து பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் உங்களைப் பொறுத்தவரை இந்த உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவராக யாரை நினைக்குறீர்கள் என்பதை கமெண்ட் செய்யலாம் நண்பர்களே.

Advertisement