இனிமேலாவது இவரை அணியில் இருந்து தூக்காம இருங்க. கம்பேக் கொடுத்த வீரருக்கு – குவியும் ஆதரவு

IND

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரை தொடர்ந்து தற்போது அடுத்ததாக இந்திய அணி ஜெய்ப்பூரில் நாளை துவங்கும் டி20 தொடரில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான டி20 அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பல புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்ததுள்ளது. மேலும் டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடம் பெற்று விளையாடிய ராகுல் சாஹர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு அக்சர் படேல் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Rohith

இதில் மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்துள்ள யுஸ்வேந்திர சாஹலுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெருகியுள்ளது. ஏனெனில் கடந்த 4-5 ஆண்டுகளாக முதன்மை சுழற்பந்து வீச்சாளராக விளையாடி வந்த அவரை நீக்கிவிட்டு வருன் சக்ரவர்த்தி மற்றும் ராகுல் சாஹரை உலகக் கோப்பை தொடருக்கு தேர்வுக்குழு விளையாட அனுப்பியது. ஆனால் அவர்கள் இருவருமே அந்த தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

- Advertisement -

இந்நிலையில் தற்போது மீண்டும் யுஸ்வேந்திர சாஹல் அணிக்கு திரும்ப அடைக்கப்பட்டுள்ளார். தற்போது கம்பேக் கொடுத்திருக்கும் அவரை இனிமேலாவது அணியில் இருந்து தூக்காமல் அணியில் நீடிக்க வைத்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி220 உலக கோப்பைக்கு அவரை தயார்படுத்த வேண்டும் என்று தங்களது கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.

Chahal

ஏனெனில் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் இந்திய அணிக்கு விளையாடிய அனுபவம் உள்ள அவர் நிச்சயம் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடக்கூடியவர் தான். ஐபிஎல் போட்டிகளின் இரண்டாம் பாதியில் கூட தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவரை டி20 உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யாதது தவறான ஒரு விடயம் என்றும் இனியாவது அவரை பேக்கப் செய்து நிச்சயம் அவரை அடுத்த டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- Advertisement -

இதையும் படிங்க : நாளை டி20 தொடர் ஆரம்பிக்கவுள்ள வேளையில் தீடீரென விலகிய கேப்டன் வில்லியம்சன் – காரணம் இதுதான்

டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீசும் திறன் உடைய சாஹல் மிடில் ஓவர்களிலுலும் விக்கெட் வீழ்த்தும் திறமை உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே தற்போது ரசிகர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement