நாளை டி20 தொடர் ஆரம்பிக்கவுள்ள வேளையில் தீடீரென விலகிய கேப்டன் வில்லியம்சன் – காரணம் இதுதான்

Williamson-4
- Advertisement -

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணியானது இங்கு நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் விளையாடவுள்ள நியூசிலாந்து அணியானது துபாயில் இருந்து நேற்று இந்தியா வந்தடைந்தது. இந்த தொடரின் முதல் போட்டி நாளை 17ஆம் தேதி ஜெய்ப்பூரில் தொடங்க உள்ளது.

INDvsNZ

- Advertisement -

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த டி20 தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தோல்வியை தழுவிய பிறகு கேன் வில்லியம்சன் தலைமையிலான அணிதான் இந்த தொடரில் விளையாடும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த டி20 தொடரிலிருந்து வில்லியம்சன் திடீரென விலகியுள்ளார். மேலும் அதற்கு காரணம் யாதெனில் : வரும் நவம்பர் 25 ஆம் தேதி கான்பூரில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் வில்லியம்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Williamson

இந்த டெஸ்ட் தொடரானது உலக சாம்பியன்ஷிப் தொடரின் கணக்கில் வருவதால் அதில் கேன் வில்லியம்சனின் பங்கு முக்கியம் என்கிற காரணத்தின் அடிப்படையில் தற்போது அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : INDvsNZ : T20 போட்டிகள் இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு ? எந்த சேனலில் ஒளிபரப்பாகும் ? – முழுவிவரம் இதோ

இதன்காரணமாக நியூசிலாந்து அணியின் தற்காலிக கேப்டனாக இந்த தொடர் முழுவதும் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியும் இந்த டி20 தொடரில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டதால் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement