ஆஸ்திரேலிய அணியில் இவர் ஒருவரை வீழ்த்தி விட்டால் போதும். எல்லாம் க்ளோஸ் – அக்தர் வெளிப்படை

Akhtar
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன . இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை சிட்னி மைதானத்தில் துவங்க உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Rohith

- Advertisement -

இந்த தொடரில் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியின் போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 36 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் அந்த தோல்வி இந்திய அணிக்கு ஏற்படக் காரணம் என்ன என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தனது கருத்தினை கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

நான் கண்ட ஆஸ்திரேலிய அணியில் இதுவே பலவீனமான பேட்டிங் ஆர்டரை கொண்ட அணியாக உள்ளது. மிடில் ஆர்டரில் ஸ்மித்தை நீக்கிவிட்டால் அந்த அணி எளிதில் வீழ்ந்து விடும். அந்த அளவிற்கு அவர்கள் மோசமான பேட்டிங் ஆர்டரை தற்போது ஆஸ்திரேலிய அணி வைத்துள்ளது. மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்பதற்கு பிங்க் பந்து மட்டும் தான் காரணம் என்று நான் கூறுவேன்.

ஏனெனில் மற்றபடி எந்த விடயமும் இந்திய அணிக்கு தோல்வியை தராது. இனிவரும் போட்டிகளிலும் அவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்று கருதுகிறேன் என அக்பர் கூறியது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்திய நீ விமர்சித்து சில கருத்துக்களை கூறிவரும் இம்முறை இந்திய அணிக்கு ஆதரவாக பேசி உள்ளதால் ரசிகர்கள் இந்த கருத்தையும் இந்தக் கருத்துக்கும் தங்களது பதில்களை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Ashwin-1

மேலும் அடுத்த டெஸ்ட் போட்டியிலும் ஸ்மித்தை விரைவில் வீழ்த்தினால் மீண்டும் இந்திய அணி எளிதில் வெற்றிபெறும் என்றும் அக்தர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement