நல்லா விளையாடுறோம்னு அதிகமாக சந்தோஷப்படாதீங்க. ஹார்டிக் பாண்டியாவை எச்சரித்த – சோயிப் அக்தர்

Akhtar-and-Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த டி20 மற்றும் ஒருநாள் தொடர் என இரண்டையும் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்த இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் முக்கிய பங்கினை ஆற்றினார்கள் என்று கூறலாம். ஏனெனில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களான பும்ரா, முகமது ஷமி மற்றும் சாஹல் ஆகியோர் அற்புதமான செயல்பாட்டினை வெளிப்படுத்தி இருந்தனர்.

Hardik Pandya 1

- Advertisement -

அதோடு இந்திய அணியின் இளம் முன்னணி ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அசத்தலான கம்பேக் கொடுத்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக கேப்டன் பொறுப்பினை ஏற்று கோப்பையை கைப்பற்றி இருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்துள்ள பாண்டியா தொடர்ந்து அற்புதமான செயல்பாட்டினை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். நடைபெற்று முடிந்த இங்கிலாந்து தொடரிலும் பேட்டிங் மற்றும் பவுலிங் என அசத்திய அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் வேளையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் ஹார்டிக் பாண்டியாவை தற்போது எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : தற்போது ஹார்டிக் பாண்டியாவின் கம்பேக் இந்திய அணிக்கு சரியான பேலன்ஸை கொடுத்துள்ளது.

Hardik Pandya 2

ஏனெனில் பாண்டியா பேட்டிங் செய்வதோடு சேர்த்து பந்து வீச்சிலும் அசத்தி வருகிறார். முன்பை விட சற்று கூடுதலாக வேகத்தில் கவனம் செலுத்தி வரும் அவர் தொடர்ச்சியாக அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பந்துவீச்சில் அசத்திய அவர் தற்போது மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக மாறியிருக்கிறார். இருந்தாலும் அவர் களத்தில் அதிக அளவு தற்போது மகிழ்ச்சியை வெளிகாட்டக் கூடாது.

- Advertisement -

ஏனெனில் பாண்டியா போன்ற ஒரு அற்புதமான வீரர் கிடைப்பது இந்திய அணிக்கு கடினம். அதோடு அவர் மீது தற்போது தான் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதுமட்டும் இன்றி அவரது பொறுப்புகளும் கூடியுள்ளது. இந்தியா போன்ற மிகப் பெரிய நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடும் வீரர்களுக்கு பொறுப்புகள் என்பது சற்றே அதிகமான ஒன்று. அந்த வகையில் இனிவரும் போட்டிகளில் ஹார்டிக் பாண்டியா இந்திய அணியின் முக்கிய வீரராக செயல்பட இருப்பதால் விக்கெட் விழுந்தாலோ அல்லது பேட்டிங்கில் பெரிய ரன்கள் குவித்தாலோ மகிழ்ச்சி அடையக் கூடாது. தொடர்ச்சியாக அடுத்த அடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க : விராட் கோலி விடயத்தில் நிர்வாகம் எடுத்த இந்த முடிவு ரொம்ப தப்பு – திலீப் வெங்சர்க்கார் ஓபன்டாக்

அந்த வகையில் அவர் கொண்டாட்டத்தை தவிர்த்து தனது தனிப்பட்ட விளையாட்டில் கவனத்தை செலுத்த வேண்டும். அவ்வாறு கவனத்தை செலுத்தும் போதுதான் தொடர்ச்சியாக அவரால் சிறப்பாக விளையாட முடியும். எனவே இனிவரும் போட்டிகளிலும் பாண்டியா தொடர்ந்து தனது கவனத்தை செலுத்த வேண்டும் என்று அக்தர் வேண்டுகோளை முன் வைத்துள்ளார். நடைபெற்று முடிந்த இங்கிலாந்து தொடரில் அசத்திய பாண்டியா தற்போது தரவரிசை பட்டியலிலும் முன்னேற்றத்தை கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement