தோனியும் அந்த முடிவை எடுத்துட்டா சி.எஸ்.கே அணியின் நிலைமை அதோ கதிதான் – சோயிப் அக்தர் ஓபன்டாக்

Akhtar
- Advertisement -

மும்பை அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த 59-ஆவது லீக் ஆட்டத்தில் 97 ரன்கள் மட்டுமே குவித்து படுமோசமான தோல்வியை சந்தித்த சென்னை அணி இந்த நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றோடு நடையை கட்டுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டினை தொடர்ந்து இந்த ஆண்டு சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாதது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நான்கு முறை கோப்பையை வென்ற அணியும், நடப்பு சாம்பியனாக இருக்கும் சிஎஸ்கே இந்த தொடரின் லீக் சுற்றோடு வெளியேறுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

CSK MS Dhoni Ravindra Jadeja

- Advertisement -

அதிலும் முக்கிய காரணமாக இந்த தொடரின் துவக்கத்தில் ஜடேஜா கேப்டனாக செயல்பட்டதுதான் இந்த சரிவிற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் கேப்டன்சி அனுபவம் சிறிதும் இல்லாத ஜடேஜாவை கேப்டனாக மாற்றியது சென்னை அணி செய்த மிகப்பெரிய தவறாக பார்க்கப்படுகிறது.

ஜடேஜாவின் தலைமையில் முதல் 8 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட ஜடேஜா தலைமையில் சென்னை அணி இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றதனால் அதன் பின்னர் மீண்டும் கேப்டன் பொறுப்பு தோனியிடம் வழங்கப்பட்டது. தற்போது சென்னை அணி சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் இந்த சீசன் முழுவதுமே தோனி கேப்டனாக செயல்பட்டு இருந்தால் நிச்சயம் சென்னை அணி இன்னும் பல வெற்றிகளைக் குவித்து இருக்கும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MS Dhoni vs MI

அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் சென்னை அணியின் இந்த செயல்பாடு குறித்து தனது விமர்சனங்களை முன் வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சென்னை அணி நிர்வாகம் இப்போது தீவிரமாக செயல்படவில்லை என்று நினைக்கிறேன். விரைவில் அடுத்த சீசனில் அவர்கள் புதிய அணுகுமுறையுடன் திரும்ப வேண்டும். ஏனெனில் இந்த சீசனில் ஏன் ஜடேஜாவிற்கு கேப்டன் பதவியை கொடுத்தார்கள்? பின்னர் ஜடேஜா ஏன் அந்த முடிவை பின் வாங்கினார் என்று எதிலுமே தெளிவான கருத்துக்கள் இல்லை.

- Advertisement -

எனவே சென்னை அணி அடுத்த ஆண்டிலும் சரிவை சந்திக்காமல் இருக்க தேவையான வீரர்களை சரியாக அந்த அணி தக்க வைக்க வேண்டும். அதோடு விக்கெட் கீப்பர் தோனி எப்போதுமே ஒரு சொத்து. அவர் அடுத்த வருடம் அணியில் இருந்தால் நிச்சயம் அவரே அவரது விருப்பப்படி கேப்டனாக தொடரலாம். ஏனெனில் அவரது வழிகாட்டுதலில் சென்னை அணி மிகச் சிறப்பாக விளையாடியுள்ளது.

இதையும் படிங்க : ஐபிஎல் வரலாற்றில் பவர் பிளே ஓவர்களில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த – டாப் 4 சரவெடி பேட்ஸ்மேன்கள்

தோனிதான் சென்னை அணிக்கு ஒரு சொத்து என்று கூறினார். ஒருவேளை தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டால் சென்னை அணியின் நிலைமை என்ன ஆகப்போகிறது என்பதை யோசிக்க கூட முடியவில்லை என அக்தர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement