ஒருநாள் உலககோப்பை தொடரில் அவர்களால் வலுவான அணியாக செயல்பட முடியும் – சோயிப் அக்தர் நம்பிக்கை

Shoaib Akhtar
- Advertisement -

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது ஷார்ஜாவில் நடைபெற்று முடிந்துள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டி20 தொடரில் பாகிஸ்தான அணியைச் சேர்ந்த முகமது ரிஸ்வான், பாபர் அசாம், ஹாரிஸ் ராஃப் மற்றும் ஷாகின் அப்ரிடி ஆகிய முன்னணி வீரர்கள் இல்லாததால் சதாப் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்த தொடரில் விளையாடியது.

Nabi

- Advertisement -

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றியும், மூன்றாவது போட்டியில் தோல்வியும் சந்தித்த ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. முதலாவதாக நடைபெற்ற டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழந்து 92 ரன்கள் மட்டுமே குவித்தது.

பின்னர் 93 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 130 ரன்களை மட்டுமே குவிக்க ஆப்கானிஸ்தான் அணி 131 ரன்கள் எடுத்து வரலாற்று வெற்றியை பதிவு செய்தது மட்டுமின்றி இந்த தொடரையும் கைப்பற்றியது.

PAK vs AFG

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வியை சந்தித்தாலும் தொடரை கைப்பற்றி அசத்தியிருந்தது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றி குறித்து பேசிய பாகிஸ்தானின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் கூறுகையில் : ஆப்கானிஸ்தான அணி இந்த தொடரில் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

- Advertisement -

உலக கோப்பையிலும் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் அவர்களுக்கு நான் ஆதரவளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் பேசிய அவர் கூறுகையில் : ஆப்கானிஸ்தான் அணியை நினைத்தால் எனக்கு தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில் அவர்கள் சரியான ஆற்றலை வெளிப்படுத்தினால் முன்னணி அணிகளுக்கு எதிராகவும் அவர்கள் ஒரு ஆபத்தான அணியாக மாறலாம். அந்த அணியில் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

இதையும் படிங்க : 22 வயசுலயே அவர் என்னை தங்கம் மாதிரி பாராட்டியதே இந்தளவுக்கு உயர காரணம் – ஆஸி ஜாம்பவானை நினைவு கூறும் சச்சின்

அதோடு தற்போது பேட்டிங்கிலும் அவர்கள் பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளதால் நிச்சயம் எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் அவர்களால் வலுவான அணியாக செயல்பட முடியும் அவர்களுக்கு எப்போதும் என்னுடைய ஆதரவு இருக்கிறது என்று சோயிப் அக்தர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement