22 வயசுலயே அவர் என்னை தங்கம் மாதிரி பாராட்டியதே இந்தளவுக்கு உயர காரணம் – ஆஸி ஜாம்பவானை நினைவு கூறும் சச்சின்

Sachin
- Advertisement -

நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த 1989ஆம் ஆண்டு 16 வயது பிஞ்சு கால்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஆரம்ப காலங்களிலேயே வாசிம் அக்ரம், இம்ரான் கான் போன்ற தரமான பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு குறுகிய காலத்திலேயே நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார். குறிப்பாக 90களில் சச்சின் அடித்தால் தான் இந்தியா வெற்றி பெறும் என்ற நிலைமையில் அவர் அவுட்டானதும் இந்தியாவில் அணைக்கப்பட்ட தொலைக்காட்சிகள் ஏராளம். ஆனால் பெரும்பாலான போட்டிகளில் அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்ட அவர் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறி ரன் மெஷினாக நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார்.

Sachin Tendulkar Allan Border Sunil Gavaskar

- Advertisement -

நாட்கள் செல்ல செல்ல தனது அனுபவத்தால் மேலும் அற்புதமாக செயல்பட்ட அவர் ஒரு சதமடிக்க தடுமாறும் பல வீரர்களுக்கு மத்தியில் அசால்டாக 100 சதங்களை அடித்து 30000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து 1999 கோகோ கோலா கோப்பை முதல் 2011 உலக கோப்பை வரை இந்தியாவின் பல சரித்திர வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார். மேலும் சுனில் கவாஸ்கர், விவியின் ரிச்சர்ட்ஸ் என அதுவரை வரலாற்றின் மகத்தான பேட்ஸ்மேன்களாக கருதப்பட்டவர்களை அசால்டாக மிஞ்சி 24 வருடங்கள் சாதனை பயணம் மேற்கொண்டு கடந்த 2013இல் ஓய்வு பெற்ற அவர் பலருக்கும் ரோல் மாடலாக இருந்து வருகிறார்.

தங்கமான பாராட்டு:
அதனால் இந்த உலகில் சச்சினை பாராட்டிய பலருக்கு மத்தியில் கிரிக்கெட்டின் முதல் சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மனாக 99.94 என்ற எந்த கொம்பாதி கொம்பனாலும் முறியடிக்க முடியாத டெஸ்ட் பேட்டிங் சராசரியை இப்போதும் உலக சாதனையாகக் கொண்டுள்ள ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் ப்ராட்மேன் பாராட்டியது யாராலும் மறக்க முடியாது. ஆம் 22 வயதில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடி சதமடித்த சச்சினை பார்ப்பது தம்மை பார்ப்பது போலவே இருப்பதாக தம்முடைய மனைவியிடம் டான் ப்ராட்மேன் மகிழ்ச்சியுடன் பாராட்டினார். அந்த காலத்திலேயே உலக அளவில் பிரபலமான அந்த பேட்டியில் டான் பேசியது பின்வருமாறு.

Bradman

“தொலைக்காட்சியில் அவர் விளையாடுவதை பார்த்த நான் அவருடைய டெக்னிக்கில் அசந்து விட்டேன். அதனால் என்னுடைய மனைவியை அழைத்த நான் அவருடைய பேட்டிங்கை பார்க்குமாறு கேட்டுக் கொண்டேன். என்னுடைய காலங்களில் விளையாடியதை நான் பார்த்ததில்லை. ஆனால் இந்த வீரரை பார்க்கும் போது நான் விளையாடுவதை பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுவதாக எனது மனைவியிடம் சொன்னேன். அவரும் தொலைக்காட்சியில் சச்சினை பார்த்து விட்டு உங்கள் இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக தெரிவித்தார். குறிப்பாக சுருக்கம், நுட்பம் மற்றும் ஸ்டோர்க் ப்ரொடக்சன் ஆகியவை எல்லாம் பசை போல் தோன்றியது” என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் 22 வயதில் இருக்கும் போது தான் பிராட்மேன் போன்ற ஒருவர் அவ்வாறு பாராட்டியது அந்த இளம் வயதில் தங்கத்தை விட அதிக மதிப்பு மிக்க ஒன்றாக கருதியதாக தெரிவிக்கும் சச்சின் டெண்டுல்கர் அவருடைய பாராட்டு தான் அந்த வயதில் இன்னும் நான் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்ததாக கூறியுள்ளார். இது பற்றி ப்ராட்மேன் – டெண்டுல்கர் எனும் பிரபல ஆஸ்திரேலிய ஊடகத்தின் ஆவணப்படத்தில் சச்சின் டெண்டுல்கர் பேசியது பின்வருமாறு.

Sachin

“இது பதிலளிப்பதற்கு மிகவும் கடினமான கேள்வியாகும். அது மிகப்பெரிய கூற்றாகும். அந்த சமயத்தில் நான் வெறும் 22 அல்லது 23 வயதில் மட்டுமே இருந்தேன். ஆனால் ஒரு 22 – 23 வயதுடைய விளையாட்டு வீரருக்கு அது போன்ற ஒரு பாராட்டை கேட்பது தங்கத்துக்கு நிகரானதாகும். இருப்பினும் என்னைப் பற்றி அவருடைய மனைவி கூறிய ஒற்றுமைகள் பற்றி பேசுவதற்கு எனக்கு எந்த உரிமைகளும் கிடையாது”

இதையும் படிங்க: ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறிய பிரசித் கிருஷ்ணா. மாற்று வீரரை தேர்வு செய்த – கே.கே.ஆர் அணி நிர்வாகம்

“அவை அனைத்தும் அவருடைய குடும்பத்தை சார்ந்ததாகும். ஆனால் அப்படி ஒரு பாராட்டு வந்த போது “வாவ் இதற்காகவே நான் இன்னும் என்னை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்” என்று நினைத்தேன். குறிப்பாக நீங்கள் கவனிக்கப்பட்டு உங்களுடைய ஆட்டம் சரியான நேரத்தில் பாராட்டப்பட்டது” என்று கூறினார்.

Advertisement