ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறிய பிரசித் கிருஷ்ணா. மாற்று வீரரை தேர்வு செய்த – கே.கே.ஆர் அணி நிர்வாகம்

Prasidh
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடப்பு 2023-ஆவது ஆண்டிற்கான பதினாறாவது ஐபிஎல் தொடரானது இன்னும் ஓரிரு தினங்களில் துவங்க இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளும் தற்போது தங்களது அணியை ஒருங்கிணைத்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் வேளையில் ஒரு சில முன்னணி வீரர்கள் இந்த தொடரில் காயம் காரணமாக வெளியேறி வருவது தொடர்கதை ஆகியுள்ளது.

prasidh

- Advertisement -

அந்த வகையில் கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

கடந்த ஆண்டு 17 போட்டியில் விளையாடிய அவர் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றார். இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஏற்பட்ட காயத்தின் காரணமாக அறுவை சிகிச்சையை மேற்கொண்ட அவர் இந்த ஐபிஎல் தொடர் முழுவதையும் தவறவிட இருக்கிறார்.

Sandeep-1

இந்நிலையில் பிரசித் கிருஷ்ணாவிற்கு பதிலாக சந்தீப் சர்மாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய சந்தீப் சர்மா நடைபெற்று முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ஏலம் போகாமல் இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் மும்பை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அவரை மாற்றுவீரராக எடுக்க ஆர்வம் காட்டிய நிலையில் தற்போது பிரசித் கிருஷ்ணாவிற்கு பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை மாற்றுவீரராக ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறியுள்ளது.

இதையும் படிங்க : வீடியோ : சாப்பிட தான் லாய்க்கி – தோல்வி கோபத்தில் சொந்த நட்டு வீரரையே மோசமாக திட்டிய பாக் ரசிகர்

இதுவரை 104 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள சந்தீப் சர்மா 114 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பதும் பவர்பிளே ஓவர்களில் மிகச் சிறப்பாக அவர் பந்து வீசுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement