நீங்களும் ஜெயிக்க மாட்டீங்க.. தானா வரும் வெற்றியையும் பிடிக்க தெரியாதா? பாக் அணியை விளாசிய அக்தர்

Shoaib Akhtar 6
- Advertisement -

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 20ஆம் தேதி பெங்களூரு நகரில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை 62 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா 2வது வெற்றியை பதிவு செய்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 367/9 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது.

அதிகபட்சமாக துவக்க வீரர்கள் டேவிட் வார்னர் 163, மிட்சேல் மார்ஷ் 121 ரன்கள் எடுத்தனர். இருப்பினும் ஆஸ்திரேலியாவை 400 ரன்கள் தொட விடாத அளவுக்கு கடைசி நேரத்தில் பந்து வீச்சில் அசத்திய பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சாகின் அப்ரிடி 5 விக்கெட்களும் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 367 ரன்களை துரத்திய பாகிஸ்தான் தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 45.3 ஓவரில் 305 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

அக்தர் அதிருப்தி:
அந்த அணிக்கு அதிகபட்சமாக துவக்க வீரர்கள் அப்துல்லா ஷபிக் 64, இமாம்-உல்-ஹக் 70 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 4 விக்கெட்களை எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார். முன்னதாக இந்த போட்டியில் வெறும் 10 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை உஷாமா மிர் தவறவிட்டதை பயன்படுத்திய டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி 14 பவுண்டரி 9 சிக்சருடன் 163 (124) ரன்கள் குவித்து வெற்றியை பறித்தார்.

அதனால் ஆட்டநாயகன் விருதையும் வென்ற அவர் கொடுத்த எளிதான கேட்ச்சை பிடித்திருந்தால் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருக்கும் என்றே சொல்லலாம். சொல்லப்போனால் அது மட்டுமல்லாமல் கேப்டன் பாபர் அசாம் உள்ளிட்ட மேலும் சில முக்கிய பாகிஸ்தான் வீரர்கள் கைக்கு கிடைத்த சில எளிதான கேட்ச்களை தவற விட்டது அந்த அணியின் தோல்வியில் முக்கிய பங்காற்றியது.

- Advertisement -

இந்நிலையில் இப்போட்டியில் ஆரம்பத்திலேயே பந்து வீச்சில் ரன்களை வழங்கி விக்கெட்டுகளை எடுக்க முடியாத நீங்கள் குறைந்தபட்சம் எதிரணி பேட்ஸ்மேன்கள் கொடுக்கும் கேட்ச்களையாவது சரியாகப் பிடியுங்கள் என்று பாகிஸ்தான் வீரர்கள் மீது சோயப் அக்தர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக பேட்டிங், பவுலிங் தான் சொதப்புகிறீர்கள் என்றால் வெற்றிக்கு அடித்தளமாக அமையக்கூடிய கேட்ச்களை எதிரணி தாமாக கொடுத்தும் அதையும் தவறவிடலாமா? என்று அவர் ட்விட்டரில் விமர்சித்துள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: அவரோட கேட்ச் விட்டா என்ன நடக்கும்னு பாத்துட்டோம் – தோல்விக்கு பின்னர் பாபர் அசாம் பேட்டி

“உங்களால் விக்கெட்டுகளை எடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. அது போன்ற சூழ்நிலைகளில் குறைந்தபட்சம் எதிரணி பேட்ஸ்மேன்கள் கொடுக்கும் வாய்ப்புகளையாவது பிடியுங்கள். கம் ஆன் கைஸ் நீங்கள் இவ்வளவு அதிகமாக கேட்ச்களை தவற விடக்கூடாது” என்று கூறியுள்ளார். இந்த சூழ்நிலையில் புள்ளி பட்டியலில் அடுத்தடுத்த வெற்றிகளால் ஆஸ்திரேலியா 10வது இடத்திலிருந்து 4வது இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில் பாகிஸ்தான் 5வது இடத்திற்கு சரிந்துள்ளது.

Advertisement