- Advertisement -
உலக கிரிக்கெட்

அந்த பைத்தியக்காரனை எல்லாம் கேப்டனா போட்டா இப்படித்தான் ஆகும்.. முகமது ரிஸ்வானை கடிந்த – சோயிப் அக்தர்

பாகிஸ்தான் மண்ணில் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி துவங்கிய 2025-ஆம் ஆண்டிற்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது தற்போது குரூப் சுற்று போட்டிகளின் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இவ்வேளையில் இந்த தொடரின் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தங்கள் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இரு அணிகளாக அரையிறுதிக்கு ஏற்கனவே தகுதிபெற்று விட்டன.

இப்படி பண்ணா பாகிஸ்தான் எப்படி ஜெயிக்கும் : சோயிப் அக்தர்

அதனை தொடர்ந்து குரூப் பி பிரிவில் எந்த இரண்டு அணிகள் முதல் இரண்டு இடங்களை பிடித்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும். அந்த வகையில் குரூப் பி பிரிவின் முக்கியமான லீக் போட்டியானது இன்று இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக கலந்து கொண்ட பாகிஸ்தான் அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதல் இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்து இந்த தொடரின் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு இழந்து லீக் சுற்றோடு வெளியேறியது.

அடுத்த போட்டியில் சம்பிரதாய ஆட்டமாக விளையாட இருக்கும் பாகிஸ்தான் அணி அந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதனால் அந்த அணியின் மீதான விமர்சனங்களும் அதிகரித்துள்ளன. நடப்பு சாம்பியனான அவர்கள் போராட்டமான ஆட்டத்தைக் கூட வெளிப்படுத்தாமல் இப்படி மோசமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியது அவர்கள் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழ காரணமாக அமைந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் பாகிஸ்தான அணியின் இந்த மோசமான ஆட்டத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து ஒரு தனியார் நிகழ்ச்சியில் பேசிய அந்த அணியின் முன்னாள் வீரரானசோயிப் அக்தர் கடுமையான வார்த்தைகளால் அந்த அணியின் கேப்டன் முகமது ரிஸ்வானை விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : பாகிஸ்தான அணியின் வீரர்களுக்கு எதிராக எனக்கு எந்த தனிப்பட்ட முன்விரோதமும் கிடையாது. ஆனால் நான் தற்போது தவறு செய்யும் வீரர்கள் குறித்து பேசியாக வேண்டும்.

இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஜாத்ரான் நிகழ்த்திய அசத்தல் சாதனை – விவரம் இதோ

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் பாகிஸ்தான் அணி கடந்த 2011 ஆண்டிலிருந்து கடந்த 14 ஆண்டுகளாக சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நான் அணியில் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதை ஏற்கனவே பேசி முடித்து விட்டேன். ஆனால் அதையெல்லாம் செய்யாமல் ரிஸ்வான் போன்ற பைத்தியக்காரனை எல்லாம் கேப்டனாக நியமித்தது வினோதமான முடிவு. இதுபோன்ற மோசமான தேர்வு இருந்தால் பாகிஸ்தானன் அணி தோல்வியை தான் சந்திக்கும் என்று கூறினார்.

- Advertisement -