தோனி மாதிரி வரமுடியாது, முடிஞ்சா என் கருத்தை பொய்யாக்கிட்டு ஜெயிச்சு காட்டுங்க – 2023 உ.கோ முன்பாக ரோஹித்துக்கு அக்தர் சவால்

Shoaib Akhtar
- Advertisement -

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐசிசி 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் துவங்குகிறது. அதில் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வென்று நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. முன்னதாக கேப்டன்ஷிப் அனுபவமில்லாத போதிலும் 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற எம்எஸ் தோனி 2011 உலக கோப்பையை சொந்த மண்ணில் வென்ற முதல் கேப்டனாக சரித்திரம் படைத்து தாம் உருவாக்கிய ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற இளம் வீரர்களை வைத்து 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்றார்.

Dhoni-Kohli-Rohit

- Advertisement -

அதனால் 3 விதமான உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சரித்திரம் படைத்துள்ள அவருக்கு பின் இந்தியாவை தலைமை தாங்கிய விராட் கோலி ஒரு பேட்ஸ்மேனாக கேப்டன்ஷிப் அழுத்தங்களை சமாளித்து சிறப்பாகவே செயல்பட்டார் என்றே சொல்லலாம். ஆனாலும் முக்கிய தொடர்களில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் சொதப்பிய அவர் உலகக் கோப்பை வென்று கொடுக்கவில்லை என்பதற்காக சர்ச்சைக்குரிய முறையில் பதவி விலகினர்.

அக்தரின் சவால்:
அவரை தொடர்ந்து 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவத்தை கொண்டுள்ளார் என்பதற்காக கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் அசத்தினாலும் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையை தொடர்ந்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் வெற்றியை பதிவு செய்ய தவறினார். அதை விட தோனி, விராட் கோலி ஆகியோரை காட்டிலும் கேப்டனாக பேட்டிங்கில் ரோகித் சர்மா சுமாராகவே செயல்பட்டு வருகிறார்.

Shikhar Dhawan Rohit Sharma MS Dhoni

இந்நிலையில் சமீப காலங்களில் பேட்டிங்கில் ரோகித் சர்மா சுமாராக செயல்படுவதற்கு கேப்டன்ஷிப் அழுத்தமே முக்கிய காரணம் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். குறிப்பாக தோனியை தவிர்த்து விராட் கோலியும் அதை சிறப்பாக கையாள்வதற்கு தடுமாறியதாக தெரிவிக்கும் அவர் ஒருவேளை இம்முறை கேப்டன்ஷிப் அழுத்தங்களை உடைத்து 2013 உலகக் கோப்பையை ரோகித் சர்மா வென்று தம்முடைய கருத்தை பொய்யாக்கினால் மகிழ்ச்சியடைவேன் என்று சவாலையும் விடுத்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “முதலில் அணி மீது நீங்கள் போடும் அழுத்தம் தான் தோல்விக்கு முதல் காரணமாகிறது. ஏனெனில் அழுத்தமான போட்டிகளில் உங்களால் அழுத்தமின்றி விளையாடுவது அசாத்தியமாகும். அதாவது இங்கே நீங்கள் தோற்க கூடாது என்று அழுத்தத்துடன் விளையாடுகிறீர்கள். இருப்பினும் கடவுள் உங்களுடைய வெற்றியை தடை செய்தால் எதுவும் செய்ய முடியாது. 2வது கேப்டனாக இருப்பவர் அனைத்து அழுத்தங்களையும் உடைத்து தம்முடைய அணியை பாதுகாத்து வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வது முக்கியமாகும்”

Akhtar 2

“அதாவது கேப்டனாக இருப்பவர் அழுத்தத்தை தமது அணியினர் உணர விடக்கூடாது. அந்த விஷயத்தில் தான் எம்எஸ் தோனி மிகச் சிறந்தவராக இருந்தார். அதனால் தான் நீங்கள் அவரது தலைமையில் 2007 டி20 உலக கோப்பையும் 2011 உலகக் கோப்பையும் 2013 சாம்பியன்ஸ் ட்ராபியையும் வென்றீர்கள். ஆனால் தோனி கேப்டன்ஷிப் பதவியிலிருந்து விலகிய பின் அனைத்தும் இந்தியாவுக்கு எதிராக தெற்கு நோக்கி சென்று விட்டது. குறிப்பாக ரோகித்தை பார்க்கும் போது அவர் முதலில் கேப்டன்ஷிப் பதவியை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டுமா என்ற கேள்வியை எனக்குள் நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்”

- Advertisement -

“ஏனெனில் ரோகித் சர்மா சில சமயங்களில் அழுத்தத்தை உள்வாங்க முடியாமல் அதற்கு உட்பட்டு விடுகிறார் என்று நினைக்கிறேன். கேப்டன் பதவியின் அழுத்தம் உங்களை முடக்குகிறது. அதுவே விராட் கோலிக்கு நடந்தது. அதனாலயே சமீப காலங்களில் நீங்கள் ஐசிசி போன்ற பெரிய தொடரை வெல்ல முடியவில்லை. இருப்பினும் இம்முறை எந்த தவறும் செய்யாமல் இருந்தால் உலகக் கோப்பை வெல்லும் அணி ரோகித் சர்மாவிடம் இருக்கிறது. ஒரு பேட்ஸ்மேனாக அவர் விராட் கோலியை விட திறமையானவர்”

Akhtar

இதையும் படிங்க:ஏசியன் கண்டிஷன்ஸ்ல உதவியா இருப்பாரு, அவர ஆசிய கோப்பையில் செலக்ட் பண்ணுங்க – தமிழக வீரருக்கு எம்எஸ்கே பிரசாத் ஆதரவு

“மிகவும் க்ளாஸ் நிறைந்த பேட்ஸ்மேனாக அவர் அடிக்கும் ஷாட்டுகள் மனதைக் கவரும். ஆனால் அதையே அவரால் கேப்டன்ஷிப் பதவியில் செய்ய முடியுமா? எனவே அவர் என்னுடைய இந்த கருத்தை தவறு என்று நிரூபிக்கட்டும். இந்த உலகக்கோப்பையை அவர் வெல்ல வேண்டும் என்பதே மொத்த இந்தியாவும் விரும்புகிறது” என்று கூறினார்.

Advertisement