ஏசியன் கண்டிஷன்ஸ்ல உதவியா இருப்பாரு, அவர ஆசிய கோப்பையில் செலக்ட் பண்ணுங்க – தமிழக வீரருக்கு எம்எஸ்கே பிரசாத் ஆதரவு

MSK Prasad 3
- Advertisement -

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் 2023 ஐசிசி உலக கோப்பை நடைபெறும் நிலையில் செப்டம்பர் 30 முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் 2023 ஆசிய கோப்பை நடைபெற உள்ளது. உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் 50 ஓவர் போட்டிகளாக நடைபெறும் ஆசிய கோப்பையில் உலகக் கோப்பையில் களமிறங்கப் போகும் இறுதிக்கட்ட அணி தேர்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற முதன்மை கிரிக்கெட் வீரர்கள் இன்னும் காயத்திலிருந்து குணமடையாமல் இருப்பதால் ஆசிய கோப்பை அணியை அறிவிப்பதில் இந்தியா தாமதம் செய்து வருகிறது.

Ravichandran Ashwin.jpeg

- Advertisement -

அதற்கிடையே 4வது இடத்தில் விளையாடப் போது யார்? மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் இல்லாத குறையை திலக் வர்மாவை வைத்து தீர்க்கலாமா? என்பது போன்ற விவாதங்கள் தற்போது உச்சகட்டமாக அரங்கேறி வருகின்றன. இந்த நிலைமையில் இலங்கை போன்ற ஆசிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகளில் தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தம்முடைய அனுபவத்தால் வெற்றியில் தாகத்தை ஏற்படுத்தும் அளவுக்கு சிறப்பாக செயல்படுவார் என்று முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார்.

அஸ்வினுக்கு ஆதரவு:
எனவே 2023 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இப்போதும் நான் ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்வு செய்வேன். ஏனெனில் ஆசிய கண்டத்தின் சூழ்நிலைகளில் விளையாடும் உங்களுக்கு தற்போதைய எதிரணிகளில் அதிக இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அவர் மிகவும் உதவியாக இருப்பார். எடுத்துக்காட்டாக தற்போதைய ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையில் ஏராளமான இடது கை பேட்ஸ்மேன்கள் நிறைந்திருக்கின்றனர்”

Prasad

“எனவே அஸ்வினும் சிறந்த மனநிலையில் இருப்பதால் நிச்சயம் பயனுள்ளவராக இருப்பார். குறிப்பாக நீங்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் விளையாடும் போது அவர் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்துபவராக இருப்பார்” என்று கூறினார். அவர் கூறுவது போல ஆரம்ப காலம் முதலே வெளிநாடுகளில் சற்று தடுமாறினாலும் இந்தியா, இலங்கை போன்ற சுழலுக்கு சாதகமான ஆசிய கண்டத்தின் மைதானங்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் எப்போதுமே தாக்கத்தை ஏற்படுத்துபவராகவே இருந்து வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக 2017க்குப்பின் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கழற்றி விடப்பட்டாலும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக 2021 டி20 உலக கோப்பையில் கம்பேக் கொடுத்த அவர் 2022 டி20 உலக கோப்பையிலும் முதன்மை ஸ்பின்னராக விளையாடினார். இருப்பினும் அதில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பந்து வீசாத காரணத்தால் அவரை தற்போது கண்டுகொள்ளாத தேர்வுக்குழு குல்தீப் யாதவ், சஹால் போன்ற அடுத்த தலைமுறை ஸ்பின்னர்களை நோக்கி திரும்பியுள்ளது.

Ashwin

ஆனாலும் ஆசிய கண்டத்தின் சூழ்நிலைகளில் எதிரணிகளில் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக செயல்படுவார் என்பதால் தேர்வு செய்யலாம் என எம்எஸ்கே பிரசாத் கேட்டுக் கொண்டுள்ளார். இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 13 வருடங்களாக மிகச் சிறப்பாக செயல்பட்டு ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்து தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக இருந்தும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அவருக்கு விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதையும் படிங்க:வீடியோ : இதைவிட ஒரு மோசமான ரன் அவுட்ட பாத்திருக்க வாய்ப்பே இல்ல – கரீபியன் லீக் தொடரில் நடைபெற்ற சம்பவம்

அதிலும் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் 5 பேர் இடது கை பேட்ஸ்மேன்களாக இருந்தும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காதது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அப்படி நம்பர் ஒன் பவுலராக இருந்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் கூட வாய்ப்பு பெறாத அவருக்கு வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் காலம் கடந்து விட்டதால் ஆசிய கோப்பை அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு 99% வாய்ப்பில்லை என்று உறுதியாக சொல்லலாம். அதனால் தற்போது ஃபார்முக்கு திரும்பி நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் குல்தீப் யாதவ் தான் ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement