ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்யாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் தொடர்ந்து 3வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா 9வது முறையாக ஆசியக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. நேற்று துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக ஃபர்கான் 57, ஃபக்கார் ஜமான் 46 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அடுத்து விளையாடிய இந்தியா 19.4 ஓவரில் 150/5 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக திலக் வர்மா 69*, சஞ்சு சாம்சன் 24 சிவம் துபே 33 ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தனர்.
மறுபடியும் மறுபடியுமா:
முன்னதாக அப்போட்டியில் அபிஷேக் ஷர்மாவை ஆரம்பத்திலேயே அவுட்டாக்கினால் பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் தெரிவித்தார். அதற்கேற்றார் போல் அப்போட்டியில் அபிஷேக், கில், கேப்டன் சூரியகுமார் ஆரம்பத்திலேயே அவுட்டானதால் இழந்ததால் 20/3 என இந்தியா திணறியது. ஆனால் அதையும் தாண்டி திலக், சாம்சன், துபே ஆகியோர் சேர்ந்து இந்தியாவை வெற்றி பெற வைத்தனர்.
இந்நிலையில் இந்த தோல்வி பற்றி சோயப் அக்தர் பாகிஸ்தான் அணியை விமர்சித்து பேசியது பின்வருமாறு. “இது சரியாக சிந்திக்கத் தவறிய அணி நிர்வாகத்தின் தவறு. கடினமான வார்த்தைகளை சொல்வதற்காக மன்னிக்கவும். ஆனால் புத்தியில்லாத பயிற்சி இருந்தது. ஏனெனில் மேட்ச் வின்னர் ஹசன் நவாஸ், சல்மான் மிர்சா ஆகியோர் மீண்டும் விளையாடவில்லை”
அக்தர் வேதனை:
“அதனால் மீண்டும் கிடைத்த இந்த தோல்வி கடினமாக இருக்கிறது. நாங்கள் மிகவும் ஏமாற்றத்துடன் வலியை சந்தித்துள்ளோம். சூப்பர் சண்டேவில் மொத்த நாடும் பார்த்த போட்டியில் மிடில் ஆர்டர் பிரச்சனையாக இருந்தது. லோயர் ஆர்டர் 50 ரன்கள் அடித்து நீங்கள் 175 ரன்களை என்று எதிர்பார்க்கிறீர்கள். ஆனால் செய்ய முடியாத அளவுக்கு நிறைய தவறுகள் இருந்தன”
இதையும் படிங்க: ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பரிசுத்தொகையை அறிவித்த பி.சி.சி.ஐ – எத்தனை கோடிகள் தெரியுமா?
“அதே போல கேப்டன்ஷிப் கேள்விக்குறியாக இருந்தது. பந்து வீச்சு மாற்றங்கள் சரியில்லை. எதிரணி பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள தடுமாறும் போது ஹரிஷ் ரவூப்பை கொண்டு வர எந்த தேவையும் இல்லை. ஆனால் அங்கே பந்து வீசிய அவர் 17 ரன்கள் வழங்கினார். அது தேவையற்றது. நாம் தோற்றதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. ஆனால் அது பரவாயில்லை” என்று வேதனையுடன் கூறினார்.



